அரவிந்த் கெஜ்ரிவால் கைது : இண்டியா கூட்டணி கொந்தளிப்பு ..!
அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)
மதுபான கொள்கையை மாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிறையில் அடைக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்ற வலுவான தகவல்கள் வெளிவந்துள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாநில முதல்வர் ஊழல் வழக்கில் கைதாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணி கலங்கிப்போய் உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கும் நோக்கில், சுனிதா கேஜ்ரிவாலிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன்.
நமது இண்டியா கூட்டணி தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முறையிடும். தேர்தல் ஆணையத்துடனான இந்த முக்கிய சந்திப்பில் பங்கேற்க, திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் டெரெக் ஓ பிரையன், முகம்மது நடிமுல் ஹாக் ஆகியோரை நியமித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதேபோல் இண்டியா கூட்டணியை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu