‘திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’- எடப்பாடி பழனிசாமி
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி.
தி.மு.க.வின் ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதற்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. மதுரை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளது.
கட்சி மாறுவது ஜனநாயகம்
மதுரைக்கு குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பணியும் சுணக்கமாக உள்ளது. பா.ஜ.க.வில் இருந்து பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஒரு கட்சியில் இருந்து ஒரு கட்சியில் மாறுவது அவர்களுடைய ஜனநாயகம் போகின்றவர்களை யாரும் தடுக்க முடியாது இது ஜனநாயக நாடு. கட்சி மாறுவது அவரவர் மனநிலையை பொறுத்து இருக்கிறது.
திமுக வாரிசு அரசியல்
விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்க அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதிமுக ஆட்சியில், நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளார்கள். தேர்தலில் வேட்பாளருக்கு ஒதுக்கப்படும் சீட் அடிப்படையில் வாரிசு அரசியலை தீர்மானிக்க முடியாது. திமுகவின் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் அது கட்சி அல்ல ஒரு கம்பெனி. தலைமைக்கு யார் வருகிறார்கள் என்பதை பொறுத்து தான் முடிவாகும். திமுக தான் வாரிசு அரசியல் செய்கிறது.
அது ஒரு குடும்ப கட்சி. திமுக தலைவர் கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் அதற்கு பின்பு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பெயர் தான் வாரிசு அரசியல் ஒரு குடும்பத்தின் கையில் ஒரு கட்சி இருக்கிறது. ஒரு குடும்பத்திற்குள் ஒரு கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை அதிமுகவில் சாதாரண தொண்டன் என்னை போல் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும்.
ஜெயலலிதா பாணி
தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவாகும்., நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தான் வாக்கு கேட்க வேண்டுமா? தேர்தலில் பிரதமர் வேட்பாளர் முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்குகள் கேட்கவில்லை.
ஏவி ராஜூ வேறு கட்சியிலிருந்து வந்தவர் அவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கட்சியில் வைத்திருந்தோம். கட்சியின் சில கட்டுப்பாடுகள், விதிகளுக்கு மீறி செயல்பட்டதால் ஏ.வி.ராஜூ ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் கூறுவதை எல்லாம் பெரிது படுத்த கூடாது. பதவி இல்லாத விரக்தியில் பேசுகிறார்.
அதிமுக கொடி பிரச்சினை
சசிகலா, ஓபிஎஸ் காரில் அதிமுக கொடி.?ஓபிஎஸ் அதிமுக கொடிகட்டி பறக்க முடியாது. ஓபிஎஸ் காரில் கொடி கட்டி இருக்கும் ஆதாரங்களை வழங்குங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
திமுகவில் கூட்டணி குறித்து தற்போது வரை பேசி தான் வருகிறார்கள் தவிர கூட்டணி அமைக்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தையில் தான் உள்ளது. இன்னும் முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இரட்டை இலை சின்னத்தை எப்படி முடக்க முடியும்.? உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு., அவர்களின்( ஓபிஎஸ்) ஆசை நிறைவேறாது அது நிராசையாக தான் இருக்கும். வாரிசு அரசியல் என்றாள் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும்.
மேகதாது அணை
மேகதாது விவகாரத்தில் அதிமுக அரசு நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம்., மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு திராணி இருந்தால் இந்த அரசை வழக்கு போட சொல்லுங்கள். மேகதாது அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு. மேகதாது அணை விவகாரத்தில் எங்கு எதை பேசவேண்டுமோ அதை பேச திமுக அரசு தவறிவிட்டது.
திமுக ஆட்சி தொடர்ந்தால்...
தமிழகத்தில் விலைவாசி உயர்வு., சொத்துவரி, மின் கட்டணம் மற்றும் சட்ட ஒழுங்கு சீர் கட்டு உள்ளது. மக்கள் இந்த அரசின் மீது கொந்தளிப்பாக உள்ளனர். திமுகவின் இதே ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu