பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு-தமிழ்நாடு முதலமைச்சர்

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு-தமிழ்நாடு முதலமைச்சர்
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு- இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசே ஈடுசெய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசே ஈடுசெய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிறப்பு இறப்பு பதிவில் காலதாமதம் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...தமிழ்நாட்டில் கொரோனா பெரும் தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய்களை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சிறிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இழப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.

துயரமான இந்த சம்பவத்தில் சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வு 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2009 கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்திற்குப் பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை கால தாமத கட்டணம் ரூபாய் 100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதம் கட்டணம் 200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் கால தாமத கட்டணம் 500 ஆகவும் உள்ளது.

பெரும் தொற்றினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்நேரத்தில் இந்த கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது தான் அடிப்படையில் இந்த கட்டணத்தில் இருந்து பொதுமக்களுக்கு விளக்கும் அந்த காலதாமதம் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தமிழக முதலமைச்சர் இன்று தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மற்றும் கிராமங்களில் 01-01- 2020 முதல் நிகழ்ந்த பிறப்பு இறப்பு குறித்த காலதாமத பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகள் வரையறுக்கப்பட்ட காலதாமதம் கட்டணத்தை வசூலிக்க படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கால தாமத கட்டணம் விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு ஈடுசெய்யும் இருப்பினும் உரிய காலத்தில் பிறப்பு இறப்பு பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது என தனது அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!