அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்கிட வேண்டும் - ஓ.பிஎஸ்

அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்கிட வேண்டும் - ஓ.பிஎஸ்
X
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் - முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அறிக்கையில் கொரோனா நோயின் தாக்கம் கொடிகட்டிப் பறக்கின்ற நிலையில் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை தொடர்ந்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கட்டுமான பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் உயர்ந்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருவதாகவும் ஊரடங்கு முன்பு 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்பொழுது 500 முதல் 520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதேபோல் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி விலை தற்போது 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 23 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3000 செங்கல் தற்போது 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 58 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 3800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்பொழுது 5200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஊரடங்கு நடைமுறையிலுள்ள அதன் காரணமாக பெரிய கட்டுமான பணிகள் முடங்கியுள்ள நிலையில் கட்டுமானப் பொருள்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. ஒருவேளை அங்கு முடிந்த பிறகு கட்டுமான பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டு அதன் காரணமாக செயற்கையான விலையேற்றம் உருவாகி இருக்கின்றது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக கடன் வாங்கி சிறிய அளவில் புதிதாக வீடுகளைக் கட்டிக் கொண்டு இருக்கின்ற, வீடுகளை புதுப்பித்துக் கொண்டு இருக்கின்ற, வீடுகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்ற, ஏழை எளிய கிராமப்புற மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபொழுது சிமெண்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் அம்மா சிமெண்ட் திட்டம் எனும் திட்டத்தை செயல்படுத்தி சலுகை விலையில் அதாவது ஒரு மூட்டை 190 ரூபாய்க்கு எளிய மக்கள் சிமெண்ட் மூட்டைகளை பெற்றுக் கொள்ள வழிவகை செய்தார்கள் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே தமிழக முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி கட்டுமான பொருட்களின் அபரிதமான வெளியேற்றுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை போக்குவதற்கான வழி முறைகளை ஆராய்ந்து விலையை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேவைப்பட்டால் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது