தனித்து விடப்பட்டதா, அதிமுக..? 10 நாள் ஆகியும் ஒருத்தர் கூட கூட்டணிக்கு வரலையே..??

தனித்து விடப்பட்டதா, அதிமுக..? 10 நாள் ஆகியும் ஒருத்தர் கூட கூட்டணிக்கு வரலையே..??
X

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய நேரடி மற்றும் மறைமுக கூட்டங்களில் இதுவரை யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்டது. அதிமுக ஆலோசனை செய்ய தொடங்கி 10 நாட்கள் ஆகியும் கூட இதுவரை எந்த பெரிய கட்சியும் அதிமுகவுடன் ஆலோசனை செய்ய முன்வரவில்லை.

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

முக்கியமாக தேமுதிக, பாமக இரண்டும் அதிமுக கூட்டணி உடன் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் இதுவரை அதிமுகவிடம் நேரடியாக ஆலோசனை செய்யவே இல்லை. அதன் பின் அதிமுகவின் டாப் லீடர் சார்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. முக்கியமாக விஐபி மாஜி ஒருவர் சார்பாக பல்வேறு கட்சிகளிடம் ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் பாமக, தேமுதிக என்று எந்த கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை, திட்டங்களை அதிமுக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக விஐபி மாஜி நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக மட்டும் முதலில் கொஞ்சம் பாசிட்டிவ்வாக பேசி உள்ளது. ஆனால் பாமக அதிக இடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாமக - அதிமுக கூட்டணி படியவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே புரட்சி பாரதம் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மற்றபடி தேமுதிக உட்பட வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவுடன் மட்டும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எடப்பாடி சார்பாக உறுதியாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கிட்டத்தட்ட லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து விடப்பட்டு விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான சில வார்த்தைகளை கட்சியின் டாப் தலைவர்களிடம் கூறியதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாக.. பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவை தவிர்த்து மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள் நம் கூட கூட்டணி வைக்கும் வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

30 தொகுதிகளில் நாம் போட்டியிடுவோம்.. மீதம் உள்ள 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்போம். பாஜக இல்லாமல் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை நிரூபிப்போம்.. இஸ்லாமிய கட்சிகள், கொங்கு அமைப்புகள், நாடார் அமைப்புகளுடன் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக டாப் தலைகளிடம் பேசி இருக்கிறாராம். ஆனால் எந்த கட்சியும் இப்போதைக்கு எடப்பாடி உடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லை என்று கூறப்படுகிறது.

Tags

Next Story