வேகமெடுக்கும் இ.பி.எஸ்., கலக்கத்தில் ஓ.பி.எஸ்.,
OPS EPS Today News Tamil -எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தபோது, இரு தரப்பையும் ஒன்று சேர்ந்து செயல்படும்படி வலியுறுத்தியதாகவும், தனித்தனியாக செயல்பட்டால், ஓட்டுக்கள் பிரிவது சரியல்ல என்றும் கவலையை வெளிப்படுத்தியதாக தெரிகிறது..
ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, வழக்கம்போலவே மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.. ஓபிஎஸ்ஸுடன் இணைவது சாத்தியமே இல்லை என்று மறுத்து பேசியதாம் எடப்பாடி தரப்பு..
அமித்ஷாவிடம் எடப்பாடி பேசியபோது, "20 மாவட்டங்களுக்கு மேல் நேரடியாகவே சுற்றுப்பயணம் செய்துவிட்டேன்.. எங்குமே ஓபிஎஸ் அலை வீசவில்லை.. யாருமே அவருடன் இல்லை.. இப்போதைக்கு கட்சி என்னிடம்தான் உள்ளது.. இதுவே 50 சதவீத வெற்றிதான். இன்னும் இரட்டை இலை மட்டும் கைக்கு வந்தால் போதும்.. நீங்கள் சொல்லும் அறிவுரையையும் ஏற்கிறேன்.. பாஜகவுக்கு 20 சீட்டுகளைகூட ஒதுக்கி தருகிறோம்" என்று சொன்னதாகவும், அதற்கு அமித்ஷா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் செய்திகள் கசிந்தன.
இது எடப்பாடி தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.. அதற்கேற்றபடி உச்சநீதிமன்ற உத்தரவும், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வர, அதிமுகவில் சலசலப்பு அதிகமானது.. எடப்பாடிக்கு நிர்வாகிகள் ஆதரவு 90 சதவீதம் இருக்கிறது என்றால், ஓபிஎஸ்ஸுக்கு தொண்டர்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது என்ற பேச்சு அதிகமானது.. சில நிர்வாகிகள் எடப்பாடி கூடாரத்தில் இருந்தே நகரவும் ஆரம்பித்தனர்.. இந்த சூழலில், தேவர் ஜெயந்தி விழாவும் சேர்ந்துகொள்ள, ஓபிஎஸ்ஸுக்கான மவுசு திடீரென எகிற தொடங்கிவிட்டது.
கடந்த சில நாட்களாகவே அமைதி காத்து வந்த எடப்பாடி பழனிசாமி, தீபாவளி சமயத்தில் 2 விதமான வியூகங்களை கையில் எடுத்தார்.. ஒன்று கலைக்குழுவினரின் பிரச்சாரத்தை கையில் எடுப்பது, மற்றொன்று, முக்கிய அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுப்பது என்ற முடிவுகளை எடுத்தார்.. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு, அதிமுக பேச்சாளர்கள், கலைக்குழுவினர் 400 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தீபாவளி கிஃப்ட் கொடுத்து அசத்தி விட்டாராம் எடப்பாடி பழனிசாமி.. சில முக்கிய நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு எடப்பாடியே போனை போட்டு பேசினாராம்..
கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அம்மா காலத்தில் இருந்ததுபோலவே, அதிமுக குறித்து பிரதான பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டி உள்ளது.. ரெடியா இருங்க என்று சொல்லி உள்ளார்.. ஆக, கலைக்குழுவினரை முன்னெடுத்து இன்னொரு பிரச்சாரத்துக்கு ரெடியாகி வருகிறார் எடப்பாடி என்கிறார்கள். மற்றொரு பக்கம், கட்சியைவிட்டு ஒதுங்கி இருக்கும் சீனியர்களை தேடிப்பிடித்து கவுரவிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளாராம் எடப்பாடி.. அந்த வகையில்தான், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் வின்சென்ட்டின் 25 வருடங்களுக்கு முந்தைய இயக்கப் பணிகளை அங்கீகரிக்கும்விதமாக அவருக்கு எம்ஜிஆர் விருது வழங்குகிறது குமரி மாவட்ட அதிமுக...
நாகர்கோவிலில் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு வழங்க போகிறாராம். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுங்கி இருக்கும் சீனியர்களை தேடிப்பிடித்து மறுபடியும் அவர்களை அதிமுக நீரோட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எடப்பாடியின் தற்போதைய ஐடியாவாம்.. ஆக, 2 விதமான அஸ்திரங்களை எடப்பாடி கையில் எடுத்துள்ளதால், ஓபிஎஸ் கூடாரம் லேசாக கலங்கி உள்ளதாம்.. பார்ப்போம்..!!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu