மதிமுக செயலாளரானார் துரை வைகோ: வாரிசு அரசியல் அல்ல என வைகோ விளக்கம்

மதிமுக செயலாளரானார் துரை வைகோ: வாரிசு அரசியல் அல்ல என வைகோ விளக்கம்
X

வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ. (கோப்பு படம்)

மதிமுக செயலாளராக, வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தலைமை அலுவலகத்தில், மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் மதிமுகவில் தன்னுடைய மகனை கட்சியில் இணைத்து பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைகோ முடிவு எடுத்தார். அதன்படி நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 106 வாக்குகளில் 104 வாக்குகள், துரை வைகோவுக்கு கிடைத்துள்ளன. இதனையடுத்து,மதிமுக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில், வாரிசு அரசியலை 1993-இல் நானே எதிர்த்து வந்திருக்கிறேன். அன்றைய நிலை வேறு; இன்றுள்ள நிலை வேறு. இது வாரிசு அரசியல் அல்ல; தொண்டர்கள், நிர்வாகிகள் துரை வைகோவை கட்சிக்குள் அழைக்க, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் பின்னர் இம்முடிவுக்கு வந்தேன். நிர்வாகிகள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, துரைவைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.

வரும் 25-ம் தேதி சென்னையில் அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செய்த பின்னர், முதல்வர் ஸ்டாலினை துரைவைகோ சந்திக்கவுள்ளார். அதன் பின்னர், கட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!