பா.ஜ.க.,வை வீழ்த்த தனது எதிரிகளுடன் கை கோர்த்த காங்.,!
கோப்பு படம்
தமிழகத்தில் காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த கட்சி திமுக. இப்போது வரை காங்., கட்சியை தமிழகத்தில் தலைதுாக்க விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளும் கட்சியும் தி.மு.க.தான். இன்று காங்., கட்சியின் பிரதான கூட்டணிக் கட்சியாக தி.மு.க., மாறி உள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த கட்சி தெலுங்குதேசம். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சியான தெலுங்கு தேசமும் பா.ஜ.க.,வை எதிர்த்து இன்று காங்., உடன் கை கோர்த்துள்ளது. டெல்லி, பஞ்சாப்பில் காங்கிரசை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி. அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான இந்த கட்சியும் இன்று காங்., உடன் கை கோர்த்துள்ளது. .
அதேபோல் காங்கிரசை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளும் இன்று காங்., உடன் கை கோர்த்துள்ளதையும் மக்கள் கவனித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் காங்கிரசை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் என ஆரம்பித்த மம்தாபானர்ஜி, அந்த கட்சியை கடுமையாக பல தேர்தல்களி்ல் புரட்டி எடுத்ததோடு, தனது மாநிலத்தில் எழுந்திருக்க விடாமல் செய்து விட்டார். காங்., கட்சியும் தனது முக்கிய எதிரியான திரிணாமுல் காங்., உடன் இன்று கை கோர்த்துள்ளது.
இப்படி தன்னை வீழ்த்தி, எழுந்திருக்கவிடாமல் அழித்த அத்தனை பேருடனும் காங்., கை கோர்த்துள்ளதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். காங்., கட்சி தனது கொள்கைகளை மொத்தமாக கை விட்டு, பா.ஜ.க.,வை வீழ்த்துவதே தனது லட்சியம் என சோனியா, ராகுல் தலைமையிலான காங்., முடிவு செய்து விட்டது.
கடந்த 50 வருஷமாக காங்கிரஸ் ஆட்சி சரியில்லைனு சொல்லித் தானே நீங்க எல்லோரும் இத்தனை கட்சி ஆரம்பிச்சீங்க..? வெறும் 10 வருஷ மோடி ஆட்சி சரியில்லைனு முடிவு செய்து, எல்லாரும் காங்கிரஸ் கூட நிக்கிறீங்கன்னா... ஆட்சி சரியில்லையா... அல்லது பா.ஜ.க.,வின் பலத்தை கண்டு பயமா? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து வருகின்றனர்.
அதுசரி பா.ஜ.க., முன்நிறுத்தும் பிரதமர் வேட்பாளருக்கு இணையாக உங்களிடம் யார் இருக்கிறார்கள் என்றாவது சொல்ல முடியுமா என மக்கள் கேள்வி எழுப்பி வருவதாகவும், இதனால் தான் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட அரசியல் நிலவரத்தை கவனிக்கும் முக்கிய பிரபலங்கள் காங்., தலைமையிலான இண்டியா கூட்டணி மீது விமர்சனம் செய்து வருகின்றனர் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu