/* */

காவல்துறை விருப்பங்களை திமுக நிறைவேற்றும்-பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர்

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா-முதலமைச்சர் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

காவல்துறை விருப்பங்களை திமுக நிறைவேற்றும்-பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர்
X

தமிழ்நாடு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது அவர் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் திறமைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும்.மற்ற குற்றங்களை விட தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.நவீன வழிமுறைகளை கண்டறிந்து சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்.என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா சென்னை வண்டலூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், 40 பெண்கள், 46 ஆண்கள் என 86 டிஎஸ்பிக்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதன்பின் இவ்விழாவில் பேசிய முதல்வர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டபோது எனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது. மக்களை காக்கும் மகத்தான பணிக்கு காவலர்கள் தங்களை ஒப்படைக்க வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள எத்தனையோ துறைகளில் காவல்துறையும் ஒன்று என நீங்கள் நினைக்கக்கூடாது. அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது அமைதித்தான். அந்த பொறுப்பு காவல்துறைக்கு தான் உள்ளது. அனைத்தையும் மிஞ்சியதாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. முகமற்ற குற்றாவளிகள் பெருகிவிட்டன. இணையவழி மூலம் பாலியல், நிதி சார்ந்த குற்றங்கள் தற்போது அதிகமாகி வருகிறது.

சைபர் குற்றங்களை தடுக்க நவீன தொழிநுட்பங்களை காவல்துறை தெரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும். குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும் என்றும் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் கர்சீஃப் கட்டிக்கொண்டிருந்தால் வழிப்பறி திருடன் என்பதை போல ஒரு காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுவார்கள். ஆனால் இப்பொழுது இணைய வசதி வந்தபிறகு அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர். இதனை தடுக்க தமிழக காவல்துறை நவீனமயமாக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 29 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...