அயோத்தி ராமர் கோவில் குறித்து முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

அயோத்தி ராமர் கோவில் குறித்து முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
X

முதல்வர் ஸ்டாலின்.

அயோத்தி ராமர் கோவில் குறித்து முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேசி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், இறுதி நேரத்தில் ஒரு கோவிலை கட்டி மக்களை திசை திருப்ப பார்க்கிறது பாஜக என்று தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் 335 பாலங்கள் கட்டியது டி. ஆர். பாலுவின் மிகப்பெரிய சாதனை. இதையெல்லாம் விட பெரிய சாதனையாக வந்திருக்க கூடியது என ஒன்று உண்டு. அது என்னவென்றால் அண்ணாவின் சேது சமுத்திர திட்டம். கலைஞரின் வற்புறுத்தலால் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகளால் இந்த திட்டம் முடக்கப்பட்டது.

இந்த திட்டம் நிறைவேறி இருந்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாக இது அமைந்திருக்கும். இந்த பாதை மாறா பயணம், இது பாலுவின் வரலாற்று புத்தகம் மட்டும் இல்லை மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம். பாஜகவை வீழ்த்த போகிற இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி ஆர் பாலுவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து எல்லோரும் பணி செய்வோம்.

ஏன் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது, யாரும் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறுகிற தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் காலத்தில் கூட எந்தவித நிதியினையும் ஒதுக்காமல், இறுதி நேரத்தில் ஒரு கோவிலை கட்டி மக்களை திசை திருப்ப பார்க்கிறது பாஜக.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் பா.ஜ.வுக்கு மக்களிடம் சொல்லுவதற்கு எந்த திட்டமும் இல்லை. இதனால் தான் முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஒரு கோவிலை கட்டி அவசர அவசரமாக திறந்து எதையோ சாதித்து விட்டதாக நினைக்கிறாங்க. இது மாதிரியான திசை திருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்