காஞ்சிபுரம் : "காந்தி பெயரால்தான் கைத்தறித்துறை": அமைச்சர் காந்தி நகைச்சுவை!
கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் காந்தி.
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அதற்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து சில பணிகள் துவங்கப்பட்டு சில மாதங்களிலேயே கிடப்பில் போடப்பட்டது.
திமுக அரசு அண்ணா பட்டு பூங்கா பணிகளை தற்போது துரித படுத்தியுள்ளது இன்று தமிழக கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் காந்தி , ஊரக தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் , எம்எல்ஏ எழிலரசன் மற்றும் துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் , காந்தி என்ற பெயர் எனக்கு அமைந்ததால் தானோ என்னவோ எனக்கு தமிழக முதல்வர், கைத்தறி துறையை ஒதுக்கிடூ செய்துள்ளாரோ, என அமைச்சர் காந்தி கூறியதை கேட்டதும், நிருபர்கள், அதிகாரிகள் மத்தியில் சிரிப்பலை உருவானது.
பின்னர் பேசிய அமைச்சர், இனிவரும் காலங்களில் நெசவாளர்களின் நலன் காக்கப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu