என்னை கண்டுகொள்ள ஆள் இல்லை : சந்திரபாபு நாயுடு உருக்கம்..!

என்னை கண்டுகொள்ள ஆள் இல்லை :  சந்திரபாபு நாயுடு உருக்கம்..!

சந்திரபாபு நாயுடு (கோப்பு படம்)

நான் சிறையில் இருந்த போது என்னை கண்டுக் கொள்ள ஆள் இல்லை.

தனது சிறை அனுபவம், தேர்தல் வெற்றி குறித்து ஆந்திராவின் முதல்வர் பொறுப்பேற்க உள்ள சந்திரபாபுநாயுடு கூறியதாவது:

நான் சிறையில் இருந்த போது, என்னை கண்டுகொள்ள இந்தியாவில் யாருமே இல்லாத போது தான், என் மகன் அமித்ஷா ஜியை சந்தித்தார். அதன் பிறகு தான் எனக்கு தொடர்ச்சியாக பல உதவிகள் கிடைத்தது. எனது சோதனை காலத்தில் இருந்து நான் மீண்டு வந்தேன். இப்போதும் நான் பெற்ற வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும், முக்கிய காரணம்.

எல்லாவிஷயங்களையும் மறந்து விட முடியாது. ஊடகங்கள் என்னைப்பற்றி ஏன் தவறாகவே செய்திகள் வெளியிடுகின்றன என்பது எனக்கு புரியவில்லை. அப்படி உறுதிப்படுத்தப்படாத யூகமான தகவல்களை வெளியிட்டு யாரை சந்தோஷப்படுத்த ஊடகங்கள் முயற்சிக்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை.

வாழ்க்கையின் மிகுந்த நெருக்கடி காலத்தை கடந்த போதும் எனக்கு உதவியாக நின்று தற்போதும் தேர்தலில் நான் வென்று ஆந்திராவில் முதல் மந்திரி ஆனதற்கும் பாஜகவின் ஆதரவு முக்கிய காரணம். இதனை சாதாரணமாக மறந்து கடந்து சென்று விட முடியாது.

எனக்கு எதிராக பல்வேறு வகையில் சதி செய்த கூட்டங்கள் எல்லாம் நான் அவர்களோடு வருவேன் என நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. நான் நன்றி உள்ளவன். மோடிஜியோடு இணைந்து இந்தியாவை மிகப்பெரும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போவது மிகபெரும் பாக்கியமாகும். எனது கடமை, பொறுப்புணர்வுகளில் இருந்து நான் பின்வாங்கவே மாட்டேன். இவ்வாறு சந்திரபாபுநாயுடு கூறினார்.

Tags

Next Story