பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து

பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து
X

இந்திய பிரதமர் மோடி 

மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ள நிலையில் விரிவாக்கத்திற்கு பிறகு 81 அமைச்சர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை நடக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அது குறித்து ஆலோசிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரதமர் மோடி அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை நடக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கூட்டம் ரத்தாகி உள்ளது.

ஏற்கனவே அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது . மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ள நிலையில் விரிவாக்கத்திற்கு பிறகு 81 அமைச்சர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags

Next Story
ai solutions for small business