2024 தேர்தலில் பாஜக 3வது முறையாக வெற்றி பெறுமா?
பிரதமர் மோடி (கோப்பு படம்)
பாஜக 2024ம் ஆண்டு தேர்தலை மிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. அதற்கான காரணங்களை வரிசையாக பார்க்கலாம். ஜார்க்கண்ட் முதல்வர் சிறையில் உள்ளார், கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ள நோட்டீஸ்கள் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில் அவரது கூட்டாளிகளான மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளனர். மம்தா பானர்ஜி, ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான பிராந்திய தலைவர்கள் ஈர்க்கக்கூடிய பணிகள் எதையும் செய்யவில்லை, ராமர்கோயில் குறித்த அவர்களின் கருத்துகள் சாதாரண மக்களை ஈர்க்கவில்லை.
நிதீஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். ஆச்சார்யா பிரமோத் கிஷோர், கமல்நாத் ஆகியோரும் பாஜகவில் இணைகின்றனர். இந்த முறை காலிஸ்தானி போராட்டங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரவீஷ்குமார் யூடியூபராக மாறி விட்டார், குணால் கம்ரா மற்றும் துருவ் ரதி வீடியோக்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.
பாஜக சிறப்பாக செயல்பட்டுள்ளது, தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய விஷயங்களை நிறைவேற்றியுள்ளது. வெளியுறவுக் கொள்கை வலுவாக உள்ளது, சில துறைகளில் பாதுகாப்பில் தன்னிறைவு அடையப்படுகிறது, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தேவைப்படுவோருக்கு இலவச ரேஷன் வழங்கி வருவது மற்றும் 370வது சட்டப்பிரிவினை நீக்கியது ஆகியவற்றிற்காக பிரதமர் மோடியை ஏற்கனவே மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு வசதிகள், நவீன ரயில்வேயை தொடங்கியது. தற்போது UPI மற்றும் Rupay மூலம் இந்தியாவின் செல்வாக்கை உலக அளவில் அதிகரிப்பது பலரை ஈர்க்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வாக்குறுதி ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. பாரத் ஜோடோ யாத்ராவும் பல இடங்களில் டைம்பாஸ் ஆகிவிட்டது. இப்படி பாஜகவுக்கு பல மாநிலங்களில் வலுவான ஆதரவு உள்ளது. ராமர் கோயில் திறப்பும், காசி கோயில் திறப்பும், கங்கை நதி சீரமைப்பும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநில மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
எல்லையில் சீனாவை முடக்கி வைத்துள்ளது. இந்திய எல்லையோரங்களில் சீனாவை விட மிகவும் வலுவான உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருவது, பல நுாறு கிராமங்களை உருவாக்கி வருவது, சீன எல்லையோரம் உள்ள இந்திய நிலங்களை சுற்றுலா தலங்களாக மாற்றி, உலக நாட்டினரை அங்கு உலவ விடுவது என தொடர்ந்து பாஜக., பல்வேறு அதிரடிகளை செய்து மக்களின் ஆதரவை பெற்றுள்ளது.
தவிர உலகின் மூன்றாவது இடத்தை நோக்கி வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகின் பலமான பாதுகாப்பு படை என பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தியது என மோடி எடுத்துள்ள முடிவுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக.,வுக்கு சிறப்பான பல சாதகங்கள் உள்ளன. இதனால் தான் பாஜக வலுவான நம்பிக்கையுடன் தேர்தலை சந்திக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu