தமிழக நிதி நிலை அறிக்கை - ஆலோசனை; புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூடுகிறது

தமிழக நிதி நிலை அறிக்கை - ஆலோசனை; புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூடுகிறது
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது .தமிழக நிதி நிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவையுடன் ஆலோசிக்கிறார்

பட்ஜெட் ஆலோசனை; புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூடுகிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூடுகிறது . நாளை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது தமிழக நிதி நிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவையுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பதாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக பேசப்படும்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். நாளை காலை நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!