கர்நாடகாவில் பா.ஜ.க., ஓட்டுகள் குறைந்ததா..?.

கர்நாடகாவில் பா.ஜ.க., ஓட்டுகள் குறைந்ததா..?.
X

பைல் படம்.

பாஜக கர்நாடகத்தில் பெரும் சறுக்கலை சந்தித்து விட்டதாய் கூறுவது தவறு என புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. இது உண்மையா என காணலாம்.

இது குறித்து பா.ஜ.க.,வினர் புள்ளி விவரங்களுடன் கூறியதாவது: கர்நாடகாவில் தேர்தல் முடிவுகளின்படி பாஜகவின் ஓட்டு சதவீதம் இம்மி அளவும் குறையாமல் அதே 36 சதவீதத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஜனதா தளத்தின் இழப்பு காங்கிரஸிற்கு சாதகமாகி உள்ளது (எப்படி தில்லியில், பஞ்சாபில், காங்கிரஸின் இழப்பு ஆம் ஆத்தி கட்சிக்கு சாதகமாகியதோ அப்படி)

கர்நாடகத்தின் கிட்டூர் பகுதியில் மட்டும் தான் பாஜக நான்கு சதவீத வாக்குகளை இழந்துள்ளது. ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் பெங்களூரில் சிறப்பான 6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஹிஜாப் பிரச்சினை பெரிதாக பாஜக கிளம்பிய கடற்கரை கர்நாடக பகுதிகளில், பாஜக தன் வாக்கு சதவீதத்தை சிறப்பாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆக தெற்கு கர்நாடகத்தில் தேவகவுடாவின் ஜனதா தளம் இழந்த வாக்குகள் தான் காங்கிரஸ் வசம் சென்று, அதன் வெற்றிக்கு காரணமாகி உள்ளது. மற்றபடி எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டது, புதுமுகங்கள், லஞ்ச புகார்கள் போன்றவை தான் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்காததற்கு காரணம். மேலும் Anti Incumbency எனும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் வாக்கு சதவீதத்தை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சவால் தான். அந்த விஷயத்தில் பா.ஜ.க., சிறப்பான இடத்தில் தான் உள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!