மேனகா, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு சீட் மறுப்பு? உ.பியில் பாஜக திட்டம் என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மேனகா காந்தி, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறாவில்லை

விரைவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மார்ச். 2 டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைத்து தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே பாஜக 195 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய தனது முதல் கட்ட பட்டியலை வெளியிட்டார்.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 51 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அதேநேரம் கடந்த முறை எம்பி தேர்தலில் போட்டியிட்ட சிலரது பெயர்கள் இந்த முறை அறிவிக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேனகா காந்தி, அவரது மகன் வருண் காந்தி, மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங், சங்கமித்ர மவுரியா, ஜெனரல் வி.கே சிங் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறாதது அவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார்களா இல்லையா என்ற பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளன.


எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக மேனகா காந்தி, சுல்தான்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.பியாக உள்ளார். அதேபோல் அவரது மகனும் 3 முறை எம்.பியுமான வருண் காந்தி கடந்த முறை பிலிபித் தொகுதியில் வெற்றி பெற்றார். கைசர்கஞ்ச் தொகுதியில் வென்ற பிரிஜ் பூஷன் சிங், மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியாவின் மகள் சங்கமித்ர மவுரியா, காசியாபாத் தொகுதியில் வென்ற ஜெனரல் வி.கே சிங் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

வருண் காந்தி விவகாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு எதிரான குரல்கள் பிலிபத் தொகுதியில் எழுந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் பாஜக மற்றும் உத்தர பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வருண் காந்தி எடுத்ததால் அவருக்கு இந்த முறை சீட் மறுக்கப்படலாம் எனக் தகவல் கூறப்படுகிறது.

விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளில் கட்சித் தலைமை மற்றும் உ.பி. அரசாங்கத்திற்கு எதிராக மிகவும் குரல் கொடுத்து வந்த வருண், இந்த முறை மறுபெயரிடப்படாமல் போகலாம். வருண் தனது தந்தை சஞ்சய் காந்தி ஒரு காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய அமேதியில் இருந்து எதிர்க்கட்சியான ஐஎன்டிஐஏ கூட்டணியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடலாம் என்று ஊகங்கள் இருந்தன. எவ்வாறாயினும், இந்த ஊகங்கள் குறித்து காங்கிரஸோ அல்லது சமாஜ்வாதி கட்சியோ (SP) கருத்து தெரிவிக்கவில்லை.

அதேபோல், இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பிஜ்னோர், மொராதாபாத், மீரட், அலிகார், பரேலி, கான்பூர், புல்பூர், அலகாபாத், மச்லிஷார், பல்லியா, தியோரியா, பிரோசாபாத், சஹாரன்பூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்படவில்லை.

அதேபோல், ரேபரலி தொகுதியில் பாஜக வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரலி தொகுதியில் இந்த முறை சோனியா காந்தி போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக ரேபரலி தொகுதியில் வலிமையான வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!