கட்சி இல்லாம போயிடும் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்ட அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அரசியல் களம் கொதித்துக்கிடக்கிறது. மாறி மாறி கருத்துக்களை வீசிக்கொள்கின்றனர். இந்த நிலையில் பா.ஜ தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவுக்கும் பா.ஜ.காவுக்கும் தான் போட்டியே தவிர இங்கு அதிமுக இல்லை என்ற ஒரு கருத்தைக் கூறியிருந்தார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் அதனை செய்வது அரசின் கடமை என குறிப்பிட்டார். திமுக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என தனது விமர்சனத்தை முன்வைத்த அவர், திமுக ஆட்சியில் நிறைய பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என குறிப்பிட்டு, யார் எதிர்க்கட்சி என்று மக்களுக்கு தெரியும் என கூறி, அண்ணாமலை வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்ற கருத்துக்களை கூறி வருகின்றார். விரைவில் அவர் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார் என விமர்சனம் செய்தார்.
பாஜவுடனான கூட்டணி முறிந்து விட்டது என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது என்று கூறிய அவர் யாருக்கு யார் போட்டி என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது புரியும் எனக் கூறினார். தேசிய கட்சிகள் கூட மாநில பிரச்னைகளை வைத்தே அரசியல் செய்கின்றன என தெரிவித்து, தமிழக மக்களின் உரிமைகளை காப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது என்றார்.
டிடிவி தினகரன் குறித்தும் பேசிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனின் கட்சி இந்த தேர்தலுடன் முகவரி தெரியாமல் போய்விடும் என கடுமையாக சாடினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu