இன்னும் இரண்டே நாளில் பேட் பிடிக்கும் அண்ணாமலை...! விளையாட ரெடியா?

இன்னும் இரண்டே நாளில் பேட் பிடிக்கும் அண்ணாமலை...! விளையாட ரெடியா?
X

கிரிக்கெட் விளையாடும் பாஜ தலைவர் அண்ணாமலை.(கோப்பு படம்)

தமிழக அரசியல் களத்தில் கட்டாயம் அடித்து ஆட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார் அண்ணாமலை.

தமிழக அரசியல் களம் அண்ணாமலை போல் ஒரு அரசியல்வாதியை இதுவரை கண்டதில்லை. முடிவைப்பற்றி கவலைப்படாமல் புல்டோசர் போல் எதிரில் இருப்பவற்றை நொறுக்கி தள்ளிக் கொண்டு போவது தான் அண்ணாமலையின் பாணி. இவரது அதிரடி அரசியல் காரணமாகவே இசட் பிளஸ் பாதுகாப்பு தர வேண்டிய அளவுக்கு எதிரிகள் உருவாகி விட்டனர். ஆனால் கவலை என்பதோ... பயம் என்பதோ அண்ணாமலையிடம் கண்டறிய முடியவில்லை. இப்படி அதிரடி அரசியல் நடத்தி வந்த அண்ணாமலை சில மாதங்களாக மவுன விரதம் இருந்தார்.

காரணம்... லோக்சபா தேர்தல் அதற்கான கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம்... மேலிடத்தின் கட்டுப்பாடு என பல சிக்கல்கள் இருந்தன. இப்போது ஒரு விஷயம் அண்ணாமலைக்கு புரிந்து விட்டது. திராவிட கட்சிகள் நிச்சயம் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்கவே... வைக்காது என்பது தெள்ளத்தெளிவாக புரிந்து விட்டது. இனிமேல் பேசியும் பயனில்லை. பேசாமல் இருந்தும் பயனில்லை. அதிரடி அரசியல் நடத்திய அண்ணாமலை இந்த தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்.

ஒரு சில சின்ன கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் பா.ஜ.க.,வை கண்டு பயந்து கூட்டணி சேர மறுக்கின்றன. நிச்சயம் ஒட்டு சதவீத கணக்குப்படி பா.ஜ., பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது இரண்டாவது இடம் பிடிக்கும் அளவு வளர்ந்து விட்டது. எனவே பா.ஜ.க.,வுடன் முக்கிய கட்சி ஏதாவது ஒன்று கூட்டணி வைத்தாலே ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பா.ஜ.க., அள்ளி விடும். பா.ஜ.க., வளர்ந்து விட்டால் அதன் பின்னர் மற்ற கட்சிகளின் நிலை அதோகதி தான். எனவே பா.ஜ.க.,வை வளர விடக்கூடாது என திராவிட கூட்சிகள் ஒன்றுடன் ஒன்று மறைமுக கூட்டணி வைத்து விட்டன.


இனிமேல் அமைதியான ஆட்டம் பலன் தராது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், குறைந்தபட்சம் தற்போதைய கணக்குப்படி இரண்டாம் இடத்தை தக்க வைப்பதற்கும் கூட அண்ணாமலை மிக, மிக கடுமையாக போராட வேண்டியிருக்கும். இதனை புரிந்து கொண்டு அண்ணாமலை, பேட்-ஐ கையில் எடுக்கத் தொடங்கி விட்டார். இன்னும் இரண்டு நாளில் பா.ஜ.க., தமிழகத்தில் பெரும் கவனத்தை ஈர்க்கப்போகிறது. பல முக்கிய வி.ஐ.பி.,க்கள் பா.ஜ.க.,வில் இணையப்போகின்றனர்.

தவிர பா.ஜ.க., மற்ற கட்சிகளை உடைக்கும், பிளக்கும், நொறுக்கும், முடக்கும். இதில் எந்த எல்லைக்கும் செல்ல அண்ணாமலை தயங்க மாட்டார். அவருக்கு இனிமேல் கால அவகாசம் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க., எம்.பி.,க்களை பெற்றால் தான் மத்தியில் ஆட்சி என்ற நிலை அந்த கட்சிக்கு இல்லை. எனவே எம்.பி.,க்கள் எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... ஆனால் எங்கள் அரசியல் ஆளுமையினை நிரூபிக்க வேண்டிய சரியான தருணம்.

இதனை நாங்கள் மிஸ் செய்ய மாட்டோம். அரசியல் பரபரப்புகளை எதிர்பாருங்கள் என பா.ஜ.க.,வின் அத்தனை தலைவர்களும் சூசகமாக பேசி வந்தனர். அண்ணாமலை இன்றைய பிரஸ்மீட்டில் இதனை உடைத்து பேசி விட்டார். ஆமாம். இன்னும் இரண்டு நாளில் அதிரடி அரசியல் துவங்கப்போகிறது என்று வெளிப்படையாகவே கூறி விட்டார். இந்த தேர்தல் நிச்சயம் வெண்கல பாத்திரக்கடைக்குள் யானை புகுந்தது போல் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அண்ணாமலை செஞ்சுரி அடிக்காவிட்டாலும், அவுட் ஆகவே மாட்டார் என பா.ஜ.க., தலைவர்கள் உறுதியாக கூறுகின்றனர். என்ன நடக்கிறது என்று நாமும் கவனமாக வேடிக்கை பார்க்கலாம்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!