தூண்டிவிட நினைத்த காங்கிரஸ் : பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

தூண்டிவிட நினைத்த காங்கிரஸ் :  பதிலடி கொடுத்த அண்ணாமலை..!
X

பாஜ தமிழக தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)

‘‘நாம என்ன செய்யனும்னு, நமது எதிரி தான் முடிவு செய்கிறான்’’ என்பது தமிழகத்தில் மிகவும் பிரபலமான வசனம்.

அண்ணாமலை தமிழக காங்கிரஸினை டீல் செய்த விதம் அது போல தான் டெர்ரராக அமைந்தது. பூரி ஜெகன்னாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனதை பற்றி மோடி கூறியதை, பல மீடியாக்கள் எப்போதும் போலவே, திரித்துப் பேசி மடை மாற்றிக் கொண்டு இருந்தார்கள்.

தமிழக காங்கிரஸ் ஒரு படி எக்ஸ்ட்ரா பர்பார்மன்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தமிழக பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார்கள்.

நான்கு பேர் துணை கொண்டு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ரயில் மறியலில் ஈடுபட்ட வரலாற்று சம்பவத்தை மனதில் வைத்து போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு நாங்கள் சாப்பாடு போடுகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

ஒரு போராட்டம் என்றால் 10 பேர் தான் வருவார்கள் என்று அண்ணாமலை நக்கல் அடித்ததை கூட புரிந்து கொள்ளாமல் நாங்கள் வந்தால் கறி சோறு போடுங்கள்... அதுவும் மாட்டுக்கறி வேண்டும் என்று மெனு கொடுத்துக் கொண்டிருந்தது காங்கிரஸ்.

மாட்டிறைச்சியை பற்றி பேசியவுடன் அண்ணாமலை டென்ஷனாகி, உணர்ச்சி வசத்தில் ஏதாவது தவறு செய்வார் என்று எதிர்பார்த்தது காங்கிரஸ். ஆனால் மாட்டை தெய்வமாக நாங்கள் வணங்குவதால் மாட்டுக்கறி பரிமாற முடியாது என்று கூலாக பதில் அளித்து விட்டார் அண்ணாமலை.

ஒரே வரியில அண்ணாமலை முடிச்சிட்டாரு என்று நினைக்கும் போது. அடுத்த வரியிலேயே இந்த திமுக காங்கிரஸ் கோஷ்டியின் டெம்ப்லேட் டயலாக்கை எடுத்து அவர்கள் முகத்திலேயே விட்டறிந்தார் அண்ணாமலை. மாட்டுக்கறி நீங்கள் சாப்பிடக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அதற்கு எப்படி எனக்கு உரிமை இல்லையோ. அதுபோல மாட்டுக்கறியை சமைக்க வேண்டும் என்று எனக்கு ஆர்டர் போடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று பஞ்ச் வைத்தார் அண்ணாமலை.

எப்ப பார்த்தாலும் கருத்துரிமை, டயலாக் விடும் திமுக மற்றும் காங்கிரசுக்கு எதிராக அதே உரிமையை வைத்து ஒரு பஞ்ச் அடித்து இருக்கிறார் அண்ணாமலை. இதற்கு காங்கிரஸ் counter கொடுக்கிறேன் பேர்வழி என்று ஏதாவது சொன்னாலும், உங்கள் நோக்கம் போராட்டம் செய்வது பற்றியா, இல்லை கறி சோறு தின்பது பற்றியா என்று மக்களே கேட்டு விடுவார்கள். எரிச்சல் அடைந்து அண்ணாமலை ஏதாவது தவறிழைப்பார் என்று எதிர்பார்த்த காங்கிரஸ். இப்போது அண்ணாமலை விட்ட ஒரு பஞ்ச் டயலாக்கில் நிலை குலைந்து போய் இருக்கிறது.

காங்.மைண்ட் வாய்ஸ் : (வடிவேல் பாணியில் )-"மல்லாக்கா படுத்துக்கிட்டு துப்பிட்டோமோ..??"

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!