அண்ணாமலைக்கு ராசியான தொகுதி எது தெரியுமா?

அண்ணாமலைக்கு ராசியான தொகுதி எது தெரியுமா?
X
நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டால் பா.ஜ.க., 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும் என பா.ஜ.க.,வினர் கூறி வருகின்றனர்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டால் பா.ஜ.க., 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும் என பா.ஜ.க.,வினர் கூறி வருகின்றனர்.தமிழக பா.ஜ.க.,வும் கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்து விட்டது. பா.ஜ.க.,வுடன் பா.ம.க., கை கோர்த்து விட்டது. கூட்டணியில் பா.ம.க.,விற்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க., தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், பா.ஜ.க.,வுடன் நெருங்கி வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தவிர ஓ.பி.எஸ்., டி.டி.வி., தினகரன், அகில இந்திய பார்வர்டு பிளாக், ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உட்பட பலர் பா.ஜ.க., கூட்டணியில் இணைய உள்ளனர். தவிர சசிகலாவும் இந்தமுறை பா.ஜ.க.,வுக்காக தேர்தல் களத்திற்கு வரும் வாய்ப்புகளும் உள்ளன. மூன்றாவது அணியாக இருந்தாலும், பா.ஜ.க.,வும் சற்று கூடுதல் பலம் பெற்றுத்தான் தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

நாமக்கல்லில் பாஜக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் வி.பி.துரைசாமி கலந்துகொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், நாமக்கல் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட மாவட்ட பாஜகவினர் வலியுறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு அண்ணாமலை போட்டியிட்டால் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

அண்ணாமலை களம் இறங்குகிறாரோ இல்லையோ. அக்கட்சி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன் உட்பட பல முக்கிய பிரபலங்கள் களம் இறங்க உள்ளனர். இந்த பட்டியலில் தமிழிசை பெயரும் இருப்பது தான் பெரும் டூவிஸ்ட்டை கிளப்பி உள்ளது என பா.ஜ.க.,வினர் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil