என்னது..? இத்தனை சதவீத அதிமுக ஓட்டு பாஜவுக்கா?
பா.ஜ. தமிழக தலைவர் அண்ணாமலை
திருவள்ளூரில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவரிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, "செல்லாக்காசாக இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பணத்தை கொள்ளையடித்து 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளின், தாரக மந்திரம் எல்லாம் எனக்கு தெரியாது. மீடியோ வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
கடுமையான வார்த்தைய பயன்படுத்த எனக்கும் தெரியும்.அதிமுக கதவு சாத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து குறித்து கேட்ட போது, "அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கதவை உடைத்துக் கொண்டு பாஜகவில் சேர்ந்துள்ளனர். நாங்கள் கதவைத் தட்டி எங்கேயும் போக விரும்பவில்லை. அவர்களே கதவை திறந்து கொண்டு வருகின்றனர்" என்றார்.
அ.தி.மு.க.,- பா.ஜ.க., இடையே வார்த்தை மோதல்கள் நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க.,வில் சேர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விரும்பாத பலர் பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளனர்.
இப்படி மொத்தம் 8 சதவீத அ.தி.மு.க., ஓட்டுகள் பா.ஜ.க., பக்கம் திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மேலும் ஏராளமானோர் சேர வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், டென்சன் ஆன அ.தி.மு.க., பா.ஜ.க.,வை கடுமையாக விமர்சித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu