பாஜகவை அடையாளம் காட்டியதே, அதிமுக தான்..!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என பேசிய பாஜக மதுரை வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியதாவது:
நாங்கள் பாஜக உடன் கள்ள உறவு வைத்திருப்பதாக ஸ்டாலினும், உதயநிதியும் பேசுகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு கை வந்த கலை. யாரை கண்டும் நாங்கள் பயப்படவில்லை. பாஜகவை கண்டு பயந்ததை போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டத்தை பாஜக கொண்டு வந்தால் கடுமையாக எதிர்ப்போம்.
மதுரையில் பாஜக பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் தன்னை அடையாளம் காட்டுவதற்காக ”2024 நாடாளுமன்றத் தேர்தல் உடன் அதிமுக காணாமல் போய்விடும்” என கூறி உள்ளார்.
’நீங்கள் கண்டுபுடிச்சு குடுங்க.. உங்களை போல எத்தனை பேர பாத்தவங்க அதிமுக காரங்கனு தெரியுமா’
நான் உட்பட மேடையில் உள்ள அத்தனை பேரும் 50 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவர்கள்.உங்களைப் போல் சொகுசு வாழ்கை நடத்துபவர்கள் அல்ல; உங்களைப் போல் வெற்று விளம்பரத்தில் நாங்கள் அரசு நடத்தவில்லை. தமிழ்நாட்டிலேயே அதிக தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுகதான்.
இந்த தேர்தலோடு வெற்று அரசியல் செய்யும் நபர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள். 1998ஆம் ஆண்டு பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தோம். பாஜக சின்னத்தை அம்மா அவர்கள் அடையாளம் காட்டினார்கள். பாஜகவின் அடையாளத்தையே அதிமுகதான் காட்டியது.
நான் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டம் எனக்குத் தெரியும். அதிமுக ஆட்சி இருந்தவரை என்.எல்.சியில் நிலம் எடுக்க அனுமதிக்கவில்லை. விவசாயிகள் நிலங்களை எடுக்கும் நிலை வரும்போது அதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu