உதிரி கட்சிகளுடன் அ.தி.மு.க., லோக்சபா தேர்தல் கூட்டணியா?
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணி செல்லப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருகாலத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு தென் மாவட்டங்களில் மவுஸ் இருந்தது உண்மை தான். குறிப்பாக கொடியன்குளம் கலவரத்தின் போது இந்த கட்சிக்கு மவுசு அதிகம் இருந்தது.
ஆனால் கிருஷ்ணசாமிக்கு செல்வாக்கு என்பது தற்பொழுது இல்லவே இல்லை என்பதை 2021 சட்டமன்ற தேர்தலில் ஒட்டப்பிடாரம் தனித்தொகுதியில் தெரியவந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி அங்கு தனித்து போட்டியிட்டு 6544 ஓட்டு வாங்கினார் என்பதை வைத்து சொல்லலாம்.
காரணம் ஒட்டப்பிடாரம் தான் டாக்டர் கிருஷ்ணசாமியின் கோட்டை என வர்ணக்கப்பட்டது! அது 2021ல் தகர்ந்தது. இதை உணர்ந்த பாஜக புதிய தமிழகம் கட்சியை கழட்டி விட்டது. உடனே டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணிக்குச் சென்று தென்காசி தனித்தொகுதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என கனவு காண்கிறார்.
2021 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட பனங்காட்டு படை கட்சி நிர்வாகி ‘‘தங்கமகன்’ ஹரி நாடார் 37,727 ஓட்டு வாங்கினார். முத்தரையர் அமைப்பை சார்ந்த KK.செல்வக்குமார் திருமயம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு 15,144 ஓட்டுக்களை பெற்றார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட பனங்காட்டு படை கட்சியும், தமிழர் தேசம் கட்சி தலைவர் முத்தரையர் KK.செல்வக்குமாரும் Better Choice! இதனால் தான் சொன்னேன் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தற்பொழுது மவுஸ் என்பது இல்லை என.
தென்காசி என்பது அதிமுகவின் கோட்டை, இங்கே அதிமுக நின்றால் மட்டுமே வெற்றி பெறும்! டாக்டர் கிருஷ்ணசாமி நின்றால் சிரமம் தான். காரணம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தேவர், நாடார், இராஜபாளையம் சத்திரிய ராஜீஸ், யாதவர்கள், வெள்ளாள பிள்ளைமார்கள் போன்ற சமூகத்தின் ஆதரவு இருக்காது.
அமைதியான வெள்ளாள பிள்ளைமார் ஊர்களில் மட்டும் நெல்லை பந்தல் ராஜாவின் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு வெள்ளாளர் வசிக்கும் ஊர்களில், தெருக்களில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக துண்டு நோட்டீஸ் வினியோகம் செய்து டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஓட்டு போடக் கூடாது என பிள்ளைமார்களிடம் கற்பூரத்தின் மீது சத்தியம் வாங்கினார்கள்.
கிருஷ்ணசாமி சந்திக்கும் அனைத்து தேர்தல்களிலும் இது நடக்கிறது. Extra வாக 2019 ல் இருந்து வெள்ளாள பிள்ளைமார்களும் கிருஷ்ணசாமிக்கு எதிராக கிளம்பி விட்டார்கள்.
புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமிக்கே இந்த நிலைமை என்றால், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஜான்பாண்டியன் ஒரு MLA தொகுதியில் தனித்து நின்றால் 2000 ஓட்டு வாங்கினாலே அது ஆச்சரியம் தான்! இவர்தான் கூட்டணி கட்சி தலைவர் என பிரதமர் அருகில் நிற்கிறார். இவர் மட்டுமல்ல... நடிகர் கார்த்திக், எஸ்ஆர்எம் பிச்சமுத்து, கொங்கு கட்சி தலைவர்கள் என பலருக்கும் இதுதான் நிலைமை. அதிமுக புரிந்து கொள்ள வேண்டும். டாக்டர் ராமதாசும் திருமாவளவனும் இதில் விதிவிலக்கானவர்கள்.
நன்றி: 7வது மனிதன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu