ராபர்ட்புரூஸ்- நயினார் மீண்டும் டிஸ்யும்..டிஸ்யும் ..!
ராபர்ட் புரூஸ் -நயினார் நாகேந்திரன் (கோப்பு படம்)
மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
விஜய பிரபாகரனாவது பரவாயில்லை, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார். அவர் வழக்கு தொடர்வதில் ஒரு லாஜிக் இருக்கு. ஆனால், “பன்னீரும் நயினாரும் ஏன் வழக்கு தொடர்ந்தார்கள்?” என விசாரித்தால், “எல்லாம் டெல்லி சொல்லித்தான்...” என்கின்றனர் கமலாலய சீனியர்கள். ``நாடு முழுவதும் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராக வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரின் தேர்தல் அஃபிடவிட்டைச் சரிபார்க்கச் சொல்லி டெல்லியிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறதாம்.
அதனடிப்படையில் ஒரு குழு அஃபிடவிட்டுகளை ஆராய்ந்ததில், நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் சில தகவல்களை மறைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்தத் தகவலைச் சொல்லி, டெல்லி மேலிடம் வழிகாட்டியதாலேயே நயினார் வழக்கு தொடர்ந்திருக்கிறார்” என்கிறார்கள் அவர்கள்.
இதை எதிர்கொள்ளத் தயாராகும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தரப்பு, நயினார் தொடர்பான 4 கோடி ரூபாய் வழக்கு விவரங்களைத் திரட்டத் தொடங்கியிருக்கிறதாம். ஆக மீண்டும் அரசியல் களம் களை கட்ட தொடங்கி உள்ளது.
மழைவிட்டாலும் செடிமழை விடாது என்பார்கள். அதுபோலத்தான் தேர்தல் முடிஞ்சாலும், இன்னும் தேர்தலின் சூடு குறையாமல் அரசியல் களம் இன்னும் வெப்பமாகவே இருக்கிறது. இதை கொண்டாடுவதெற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அது அவர்களுக்கு கிடைத்த அல்வாமாதிரி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu