தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக அப்துர் ரஹ்மான் எம்பி நியமனம்

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக அப்துர் ரஹ்மான் எம்பி நியமனம்
X

வக்பு வாரியத் தலைவராக அப்துர் ரஹ்மான் எம்பி 

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக அப்துர் ரஹ்மான் எம்பி நியமனம் - கடையநல்லூரில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் எம்பி வக்ஃபு வாரியத் தலைவராக நியமனம். கடையநல்லூரில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுகவின் வலிமையான வாக்கு வங்கிகளாக முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அதேநேரத்தில் திமுகவை தவிர வேறு அணியில் சேர முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகளாகவும் முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பொதுவான நியமனங்களின் போதும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கே திமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்கிறது. இது திமுகவில் நீண்டகாலமாக பாடுபட்டு வரும் முஸ்லிம்களை இயல்பாகவே புறக்கணிக்க வைக்கிறது. இதனால் வரும் அதிருப்தியை திமுக தலைமைக்கு சுட்டிக்காட்டும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

தற்போது தமிழக வக்பு வாரியத் தலைவர் பதவியானது இந்த முறையாவது திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் நாடு வக்பு வாரிய உறுப்பினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர எம்.அப்துல் ரஹ்மான் முன்னாள் எம்.பி, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் மகள் பாத்திமா முசப்பர் , அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன், சன்னி உலாமாக்கள் மற்றும் ஷ்யா உலாமாக்கள் பிரிவில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அப்துல் ரஹ்மான் வக்பு வாரியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

1989-ம் ஆண்டு திமுக ஆட்சியை பிடித்த போது முஸ்லிம் லீக் தலைவரான அப்து லத்தீப்-க்கு வக்பு வாரியத் தலைவர் பதவியை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொடுத்தார். ஆனால் 1991-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அக்கட்சியின் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப்புக்கு அந்த பதவியை கொடுத்தது. 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது மீண்டும் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப்புக்கே அந்த பதவி கொடுக்கப்பட்டது.

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திமுக மூத்த முன்னோடி இசைமுரசு என போற்றப்பட்ட பாடகர் நாகூர் ஹனிபாவுக்கு வக்பு வாரியத் தலைவர் பதவி தரப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சி அமைந்த போதும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஹைதர் அலிக்கும் பின்னர் கவிக்கோ அப்துரல் ரகுமானுக்கும் வக்பு வாரியத் தலைவர் பதவி வாரி வழங்கப்பட்டது.

எப்ப பார்த்தாலும் கூட்டணி கட்சியினருக்கே வக்பு வாரியத் தலைவர் கொடுக்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அணுகுமுறையை மாற்றி இருந்தால் சற்றே ஆறுதலை தந்திருக்கும். இந்நிலை தொடர்ந்தால் திமுகவில் புதிதாக முஸ்லிம்கள் வர மாட்டார்கள் இ.யூ முஸ்லிம் லீக்,, தமுமுக, எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகளில்தான் இணைவார்கள். இதனால் கூட்டணி கட்சிகள் தான் பலப்படும். ஆகவே திமுகவில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம் பிரமுகர்களுக்கும் வாரியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் எம்பி வக்ஃபு வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடையநல்லூரில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil