'எங்களுக்கும் காலம் வரும்..!' பிரதமர் மோடிக்கு சாமானியனின் ஒரு நெடுங்கடிதம்..!

எங்களுக்கும் காலம் வரும்..! பிரதமர் மோடிக்கு சாமானியனின் ஒரு நெடுங்கடிதம்..!
X

A lesson to all parties-பிரதமர் மோடி (கோப்பு படம்)

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் எல்லோருக்குமான வெற்றி. யாருக்கும் இது தோல்வி இல்லை. அதுதான் மகேசன் தந்த அபூர்வத் தீர்ப்பு.

A lesson to All Parties, Election Teaches a Lesson, Bjp not Defeated, Congress Not Succeeded, Political News

தற்போது பதவி ஏற்றிருக்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களே..!

சாமானிய மக்களில் ஒருவனாக இருந்து இந்தக்கடிதத்தை தங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

அனைவருக்குமான வெற்றி

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் சாதகமான முடிவாகத்தான் தெரிகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி, 2019ம் ஆண்டில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் 2024 தேர்தலில் 240 இடங்களுக்குச் சரிந்து ஏமாற்றப்பட்டிருந்தாலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருப்பது அந்த கட்சிக்கு கிடைத்த ஆறுதலான நிம்மதி.

A lesson to All Parties

சற்று சிந்தித்துப்பார்த்தால் யாருக்குமே பெரிய வெற்றியும் கிடைக்கவில்லை. அதேபோல பெரிய தோல்வியும் கிடைக்கவில்லை. என்றால் இந்த முடிவு அனைவருக்குமான முடிவு. சீர்தூக்கி பார்க்கவேண்டிய முடிவு.

வாக்காளர்களின் தெளிவான முடிவு

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பெற்றுள்ள எண்ணிக்கை பாஜகவின் மொத்த எண்ணிக்கையை விட குறைவாக இருக்கலாம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிமீது ஒரு துரும்பு அளவேனும் நம்பிக்கை இருப்பதை இந்த தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது. அதாவது மோடி தலைமையை மக்கள் விரும்புகின்றனர். ஆனால், ஒரு சிறிய சறுக்கலில் மக்கள் எதையோ பாஜகவுக்கு உணர்த்த விரும்புகின்றனர். அதற்கான பதில்தான் 240 இடங்கள்.

A lesson to All Parties

காங்கிரஸ், ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் இரண்டு இலக்கங்களுக்குள் சுருண்டு முடங்கிவிடப்பட்ட பின்னர், மீண்டும் ஒரு படுதோல்வியை வழங்கி இருக்கலாம். ஆனால், காங்கிரசுக்கு கொடுத்த வெற்றியின் மூலமாக, அது பாஜகவை தனித்து ஆட்சி அமைக்கும் 272 இடங்களை எட்டவிடாமல் அதற்குக் கீழே வைத்திருப்பதில் சரியான இலக்கை வாக்காளர்கள் தீர்மானித்திருப்பது ஆச்சர்யமான கணக்கு.

பாஜகவின் இந்து வாக்காளர்கள் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கண்டு மகிழ்ச்சியடைந்தாலும், முஸ்லிம் வாக்காளர்கள் இந்திய அரசியலில் தங்கள் ‘வீட்டோ அதிகாரத்தை’ மீண்டும் பெற்றுள்ளதற்கான காரணிகளையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

A lesson to All Parties

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இந்த முடிவுகளால் மகிழ்ச்சியில் இருக்கலாம். ஆனால் பாஜக தான் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தின் நெம்புகோல் சரியாக பயன்படுத்தப்படவேண்டும். பாஜக கட்சிக்குள் நிறைய வேலை செய்யவேண்டும் என்பதை தலைமை சரியாக உணர்ந்துள்ளது. தேர்தல் தான் அதற்கான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.

உட்கட்சி சீரமைப்பு

முதலில் கட்சி தனது சொந்த வீட்டை(கட்சியை) ஒழுங்கமைக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளன என்று அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடவும் கூடாது. தொடக்கத்தில் இருந்தே ஆட்சிக்கான பணியும் கட்சிக்கான பணியும் முகத்தின் இரண்டு கண்கள் போல செயல்பாட்டுக்கு கொண்டுவருவது அவசியம். ஆட்சிக்குள் கட்சியினர் மூக்கை நுழைப்பது ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும்.

A lesson to All Parties

தேர்தலுக்கு முந்தைய பாஜகவின் கணிப்பு கட்சியினரிடையே ஒரு கர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதை மறுத்துவிட முடியாது. அத்தனை கருத்துக்கணிப்புகளும் அப்படித்தான் கூறியிருந்தன. ஆனால் கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை ஆய்வு செய்தது அல்ல. அது கட்சியினரிடம் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு என்றுதான் சொல்லவேண்டும்.

பாஜக லோக்சபா முடிவுகளை எச்சரிக்கையுடனும் அதே வேளையில் நம்பிக்கையுடனும் பாதுகாப்பாக கொண்டு செலுத்தவேண்டும். ஏனெனில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்கவைப்பது என்பது அரிதான ஒன்று. அது மோடிக்கு கிடைத்த வெற்றி. அவர்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அதைக் காப்பாற்றியே ஆகவேண்டும். 2029ல் இன்னொரு தேர்தல் இருப்பதை மறந்துவிட முடியாதே.

A lesson to All Parties

மோடி 3.0

உலகம் முழுவதுமே கொரோனா தொற்றுக்குப் பின் முந்தைய ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக எந்த தகவலும் இல்லை, இந்தியாவில் மோடியைத் தவிர. எவ்வாறாயினும், பாஜகவுக்கு இருக்கும் நெருக்கடிகளில் ஒன்று மதவாத கட்சி என்கிற நோய். இந்த நோய்க்கு எந்தவொரு சரிசெய்தல் நடவடிக்கை என்கிற மருந்தை கையில் எடுக்காமல் இருக்க முடியாது. அதேவேளையில் தவறான மருந்தையும் உட்கொள்ளமுடியாது.

மதவாதக் கட்சி என்ற பெயரை மாற்றவும் வேண்டும். அதற்காக சில நடவடிக்கைகளை எடுத்தாகவும் வேண்டும். ஒருவேளை தேர்தல் முடிவுகள் தனித்த பதில்களைத் தந்திருந்தால் இந்த சிக்கல்கள் நீடிக்க வாய்ப்பிருந்து இருக்காது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய தேர்தல் முடிவுகள் தலைகீழ் மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டது.கட்சித் தலைமையைக் காட்டிலும் அரசியல்வாதிகள் தங்கள் அகங்காரப் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்கு உத்தரப்பிரதேச வாக்காளர்கள், குறிப்பாக அயோத்தி, தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தைக் கற்பித்துள்ளனர்.

A lesson to All Parties

இதை பாஜக வீழ்ச்சியாக கருதாமல் இதை ஒரு பகுப்பாய்வாக எடுத்துக்கொண்டு தங்கள் கட்சியினரை சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வழிகாட்டவேண்டும். இதுகூட பாஜகவுக்கு ஒரு சரியான தீர்ப்பாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து.

வேட்பாளர் தேர்வில் குளறுபடி

இந்த தேர்தலில் எம்.பி தொகுதியில் நிற்பதற்கு பாஜக தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யவில்லை. யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற மமதைப்போக்கு இருந்தது. சரியான ஆட்களைத் தேர்வு செய்யாததும் அதன் தோல்விக்கு இன்னொரு காரணம். பெரும்பாலானவர்கள் தகுதி அற்றவர்கள். மேலும் ஏதாவது ஒரு வகையில் ஊழல் செய்தவர்களாக இருந்தனர். கட்சிக்குள்ளேயே அதற்கான எதிர்ப்பும் இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கட்சியினர் பெரும் அதிருப்தி அடைந்து இருந்தனர்.

சமமாக பழகும் நிலை

பாஜகவில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை எவ்வித வேறுபாடும் இல்லாமல் பழகும் நிலை உருவாக்கப்படவேண்டும். சில மாவட்ட நிர்வாகிகளே கட்சித் தலைவரை சந்திப்பது என்பது பிரதமர் மோடியை சந்திப்பது போன்றது என்று வாய்விட்டு கூறும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகிகளுக்கே அந்த நிலை என்றால் வட்ட தலைவர் நிலையை எண்ணிப்பாருங்கள். இந்த நிலை பாஜகவில் மாறவேண்டும்.

A lesson to All Parties

மக்களுக்காக குரல்கொடுக்கும் உள்ளூர் தலைவர்கள்

ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசு தலைவராக ஆக்கியதும், திரௌபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவராக ஆக்கியதோடு மட்டுமே பாஜகவின் பணிகள் நிறைவடைந்துவிடுவதில்லை. அடிமட்ட மக்களின் பிரச்னைகளுக்கு உள்ளூர் தலைவர்கள் குரல்கொடுக்கவேண்டும். அவர்களின் பிரச்னைகளை களைவதற்கு பாஜக தலைவர்கள் முனைப்புக்காட்டவேண்டும்.

A lesson to All Parties

மாநிலங்களுக்கு சமமான மதிப்பு

மாநிலங்களிலும் பாஜக தனது வேறுபாடான முகத்தைக்காட்டக்கூடாது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கு சலுகை காட்டுவது தெரிகிறது என்பதை வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர். அதிலும் அரசு கவனமாக இருக்கவேண்டும்.

குறிப்பாக நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான முழு முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும். அதற்கான முஸ்தீப்புகளில் பாஜக அரசு ஈடுபட்டிருப்பது தெரிகிறது. மோடி உலக அளவில் மதிப்புமிக்க பெரிய தலைவர் என்பதை மக்கள் மறுக்கவில்லை. ஆனால் எங்களையும் கவனியுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளனர்.

Tags

Next Story