அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தி.மு.க. தொண்டனின் வாழ்த்து கவிதை

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Erode News Today-திருச்சி மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசாக மட்டும் இன்றி தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் செல்லப்பிள்ளையாகவும், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்ற நண்பனாகவும், தி.மு.க. இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சராகவும் இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி மாவட்ட தூண்களில் ஒருவராகவும், அண்ணா அமைச்சரவையிலும், கருணாநிதி அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர் மட்டும் இன்றி அண்ணாவால் தீரர்கள் கோட்டம் என புகழப்பட்ட திருச்சி மாவட்டத்தின் அனைத்து கட்சி தலைவராகவும் இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவரது தந்தை அன்பில் பொய்யாமொழி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அமைச்சராக இல்லை என்றாலும் அமைச்சருக்கு நிகரான ஆளுமையுடன் தமிழகம் முழுவதும் மு.க. ஸ்டாலினுடன் வலம் வந்தவர். தந்தை வழியில் தற்போது அவரது தனயன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆளுமைத்திறனுடன் விளங்கி வருகிறார்.
இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி பிறந்த நாள் விழா கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சக அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. முன்னணி பிரமுகர்களும் நேரிலும், இணையம் மூலமாகவும் வாழ்த்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட தி.மு.க.வின் மூத்த, கடைகோடி தொண்டர் பார்த்தா என்பவர் மிகவும் வித்தியாசமான முறையில் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அந்த கவிதையின் நயத்தை இனி பார்க்கலாம்.
இராணுவவணக்கம்
ஆண்டவனின் படைப்பில்
அனுதினமும் அற்புதங்கள் !
அதில் ஒன்று தான்
டிசம்பர் இரண்டோ !
குளிர்காலத்தில் பிறந்த
எங்கள் குதூகலம் நீ !
அரசு பள்ளி மாணவர்களை
அகிலம் சுற்ற வைத்தவன் நீ !
அரும்பு, மொட்டு, மலர், காய், கனி
என்று 5-ம் வகுப்பு வரை
அற்புதமாக கல்வி கற்றுத்தர
பணித்தவன் நீ !
எண்ணும் எழுத்தும்
என் மேடை என் பேச்சு
கலைத்திருவிழா என கல்வியை
உச்சம் தொட வைத்தவன் நீ !
இந்திய திருநாட்டின் வழிகாட்டி
எங்கள் வசந்தம்
திராவிட மாடல் முதல்வரின்
முத்தான பாராட்டை நீ பெற்றது
பாரத ரத்னாவுக்கும் மேல் அல்லவா!
தமிழக தலைவராக
உலா வரும் எங்கள் உதயநிதி
சேலம் மாநாட்டிற்கு பிறகு
இந்தியாவின் இளந்தலைவராக,
இளம் போராளியாக
வலம் வருவார் !
வழி நடத்தும் படையின்
முதல் வீரனே
உனக்கொரு இராணுவ வணக்கம் !
அன்றொரு நாள் சென்னையில்
நீ இன் பண்ணி
முழுக்கை சட்டை போட்டு
முகம் முழுவதும் புன்னகையோடு
புத்தக கண்காட்சியை
திறந்து வைத்த அழகை பார்த்து
ஆனந்த பட்டவர்களில் நானும் ஒருவன் !
படித்த புத்தகம் உனக்கு
சொல்லி தந்த பாடத்தை விட
நடித்த மனிதர்கள் உனக்கு
சொல்லி தந்த பாடமே அதிகம் !
போர்க்களம் மாறலாம்
போராட்டம் மாறாது என்பதை
உணர்ந்த உதயாவின் செல்லமே !
தில்லைநகரிலோ,
அண்ணாமலை நகரிலோ,
ராமலிங்கநகரிலோ, பாரதிநகரிலோ,
நீ வசிக்க வில்லை மாறாக
எங்கள் இதய தெய்வம்
அண்ணாநகரில் தான் வசிக்கிறாய்.
அண்ணா நகரிலிருந்து
உன் அரசியல் வியூகம்
மேலும் அதிரடியாய்
தொடங்கட்டு;ம்
அது திராவிட மாடல் ஆட்சியை
திக்கெட்டும் பரப்புவதாக இருக்கட்டும் .
எங்கள் மாவட்டமே !
கழக வரலாற்றில் போராட்ட குணம்
நிறைந்த ஊர்களில் மணப்ப்பாறையும் ஒன்று
மணப்பாறை மண்ணில் நின்று
2024-ல் நடப்பது தேர்தல் களம் அல்ல
அது போராட்ட்ட களமென பறைசாற்றினாய்
களத்துக்கு தயாராகிவிட்டோம் !
தாத்தாவோடும், அப்பாவோடும்
சேர்மன் தாத்தாவோடும்,
சித்தாப்பாவோடும்,
கரம்பிடித்து கழக கொடியை
உயர்த்தி பிடித்த
கடைக்கோடி தொண்டனின்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பல்லாண்டு வாழ்க ! வாழ்க !
பாசமுள்ள பார்த்தா
தி.மு.க. தொண்டன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu