2 ஜி மாறன்,3ஜி கருணாநிதி, 4 ஜி காங்கிரஸ்- அமித்ஷா

2 ஜி மாறன்,3ஜி கருணாநிதி, 4 ஜி காங்கிரஸ்- அமித்ஷா
X

2 ஜி வழக்கில் மாறன் குடும்பத்தில் 2 தலைமுறைகள், 3ஜி ஊழலில் கருணாநிதி குடும்பத்தில் 3 தலைமுறைகள் 4 ஜி ஊழலில் காங்கிரசில் 4 தலைமுறைகள் உள்ளதாக விழுப்புரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெற்ற வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசும் போது,பாரத நாட்டின் இனிமையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன் என்ற அவர் தொடர்ந்து மத்தியஅரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டார். எம்ஜிஆரின் திட்டத்தினை ஜெயலலிதா செயல்படுத்தி வந்தார். இத்திட்டத்தினை நாடு முழுவதும் மோடி செயல்படுத்தி வருகிறார்.

ஊழல் பற்றி திமுக பேசும் போது சிரிப்பாக உள்ளது. 2 ஜி ஊழல் செய்தது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக. 2 ஜி வழக்கில் மாறன் குடும்பத்தில் 2 தலைமுறைகள், 3ஜி ஊழலில் கருணாநிதி குடும்பத்தில் 3 தலைமுறைகள் 4ஜி ஊழலில் காங்கிரசில் 4 தலைமுறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மிகச் சிறப்பாக கொரோனா காலத்தில் பணியாற்றினார்கள். பாஜக ஆட்சி அமையும் போது வேல்யாத்திரை முழுமை பெறும் என்றார்.

Tags

Next Story