ஆட்சி மாற்றத்திற்கு 4 மாதம் தான், மு.க. ஸ்டாலின்

ஆட்சி மாற்றத்திற்கு 4 மாதம் தான், மு.க. ஸ்டாலின்
X

தை பிறந்தால் வழி பிறக்கும் இன்னும் நான்கு மாதம் தான் நான் ரெடி நீங்க ரெடியா என திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை ராயபுரத்தில் பேசினார்.

சென்னை ராயபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக நடத்தும் மக்கள் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் கூறியதாவது,பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை திமுக தான் கையில் எடுத்தது.பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளார்.வேலுமணிக்கு வேண்டிய அதிமுக நிர்வாகி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

மேலும் அமைச்சர்களின் மகன் அவர்களுக்கு நெருங்கியவர்கள் என பலரும் தொடர்பில் உள்ளார்கள் அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. இன்னும் நான்கு மாதம் தான். நான் ரெடி நீங்க ரெடியா ? என கேள்வி எழுப்பினார்.

Tags

Next Story