பொங்கல் டோக்கன் வழங்குவதை நிறுத்த ஸ்டாலின் கோரிக்கை

பொங்கல் டோக்கன் வழங்குவதை நிறுத்த ஸ்டாலின் கோரிக்கை
X

அதிமுகவினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பரிசு திட்டம் ஏதோ அ.தி.மு.க. நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசு போல் காட்டிக் கொள்ள முதலமைச்சர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.ஜனவரி 4ஆம் தேதி முதல் பணம் வழங்குவது துவங்கப்படும் என்று அரசு ஆணையை வெளியிட்டுவிட்டு டிசம்பர் 21ஆம் தேதியே தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் துவக்கி வைத்து, சில பயனாளிகளுக்கு 2500 ரூபாயை வழங்கினார். தேர்தலை எண்ணி அவ்வளவு அவசரம் அவருக்கு. இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அதிமுகவினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் செய்ய வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. பொங்கல் பரிசு அரசு கஜானாவில் இருந்து வருகிறது. அது மக்களின் வரிப்பணம்.

அது மக்களுக்கே திரும்பிப் போவதைத் திமுக மனமார வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை அ.தி.மு.க.வினரை வைத்து எப்படி வழங்கச் சொல்கிறார் முதலமைச்சர்? அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அ.தி.மு.க.வினர் ஏன் கையாள வேண்டும்? எனவே பாெங்கல் பரிசினை வழங்கும் திட்டத்தை அதிமுகவினரை வைத்து வழங்குவதை நிறுத்தி விட்டு ரேஷன்கடை ஊழியர்களை கொண்டு வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story