அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை இழக்காத திமுக

அங்கீகரிக்கப்பட்ட  சின்னத்தை  இழக்காத  திமுக
X
1958 மார்ச் 2 ஆம் தேதி, தேர்தல் கமிஷனால் திமுக மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது

இந்திய அரசியல் வரலாற்றில், முதன்முறை கட்சி அங்கீகாரம் பெறும்போது ஒதுக்கப்பட்ட ஒரு சின்னத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக இழக்காத ஒரு கட்சி என்றால் திமுகதான். அந்தக் கட்சி மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்றதும், உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டதும் இதே நாளில்தான்.

திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17-இல் திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தோற்றுவிக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மு.கருணாநிதி கொள்கை பரப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1957 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க உறுப்பினர்கள் 15 பேர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றதை தொடர்ந்து தி.மு.க மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு "உதயசூரியன்" தேர்தல் சின்னமாக தேர்தல் கமிசனால் அறிவிக்கப்பட்ட தினம் இன்று. ( 02 மார்ச் 1958 )

நன்றி: திராவிட ஆய்வு

ஒரு சமூக இயக்கமாக மட்டுமே செயல்பட்டுவந்த தி.மு.க, அதிகாரபூர்வமாக 1956 மே மாதம் திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில், தேர்தலில் பங்கேற்பது என முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, 1957-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 15 இடங்களில் வெற்றி பெற்றது. முதல் தேர்தலிலேயே ஒரு நம்பிக்கைக்குரிய வெற்றியைப் பெற்றது அண்ணா தலைமையிலான திமுக. தொடர்ந்து 1958-ம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி, மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்று, உதயசூரியன் சின்னம் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து,1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தல் முதல், 2022 பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வரை உதயசூரியன் சின்னத்தில்தான் திமுக போட்டியிட்டு வருகிறது. அப்போது ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை இதுவரை இழக்காமல் வெற்றிக்கொடி நாட்டிவருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!