புதிதாக 110 மொழிகளில் மொழி பெயர்ப்பு வசதி..!
கூகுள் மொழி பெயர்ப்பு
கூகுள் தான் தற்போது மொழிபெயர்ப்பாளர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. இந்த மொழி பெயர்ப்பின் அவசியம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கூகுளும் தனது சேவையினை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.
தற்போது கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் புதிதாக 7 இந்திய மொழிகள் உட்பட 110 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. கடந்தாண்டு 24 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 110 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் 110 புதிய மொழிகளை இணைத்ததன் மூலம் மொத்தமாக 243 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட 110 மொழிகளில் அவதி, போடோ, காசி, கோக்போரோக், மார்வாடி, சந்தாலி மற்றும் துலு போன்ற ஏழு இந்திய மொழிகளும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu