Wedding Anniversary Quotes in Tamil -இருமனங்கள் இணைந்த இனிய நாளில் வாழ்த்துவோம் வாங்க..!

Wedding Anniversary Quotes in Tamil -இருமனங்கள் இணைந்த இனிய நாளில் வாழ்த்துவோம் வாங்க..!
X
Wedding Anniversary Quotes in Tamil-மணம் முடித்தல் என்பது மரியாதைக்குரியது. அது உயர்வுக்குரியது.அதனால்தான் அது 'திரு'மணம் என்றானது.

Wedding Anniversary Quotes in Tamil

காலா காலத்துல ஒரு கல்யாணம் பண்ணனும் என்பார்கள்.அதற்கு பருவத்தே பயிர் செய்யணும் என்பது போன்ற ஒரு அறிவுரையாகும். இருமனங்கள் இணையும் வாசம் உள்ள வாழ்க்கையைத் தொடர்வதால் அது திருமணம் என்றானது.

  • இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்..
  • பிறக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்..
  • பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்..!
  • ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது..!

விஜய்யின் மநகூ 2.0...! வேற லெவல் ப்ளான்..! திமுகவுக்கு குடச்சல் ஸ்டார்ட்..!

  • கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்..! திருமண நாள் வாழ்த்துகள்..
  • உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புவது, இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்..
  • நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால் போதும்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்..

Wedding Anniversary Quotes in Tamil

  • என்றும் இந்த அன்பும் காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்தக்கள்! Happy Wedding Anniversary..
  • இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.. Happy Wedding Anniversary..
  • ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்..
  • வாழ்க்கை எதைக் கொண்டு வந்தாலும் அன்பால் அதை எதிர்கொள்வோம். திருமண ஆண்டு வாழ்த்துகள்..whatever life brings love can handle it. Happy wedding anniversary..!

Wedding Anniversary Quotes in Tamil

  • கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற உறவும் போற்ற இணை பிரியாத வாழ்வினிலே, நூறாண்டு காலம் வாழ்ந்திடவே உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..
  • முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது..
  • இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்..

Wedding Anniversary Quotes in Tamil

  • திருமண நாள் நல்வாழ்த்துகள்.. செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்..இனிய திருமண வாழ்த்துக்கள் கூற..
  • ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால் உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும், விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி இருவருக்கும் இருந்துவிட்டால் இந்த திருமண நாள் போல அனைத்து நாட்களும் சிறப்பானதே.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்..
  • அன்பை மலர்மாலையாய், உறவை பூச்செண்டாய் ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம், முடிவில்லா இன்பப் பயணமாக தொடர வாழ்த்துகின்றோம்..

Wedding Anniversary Quotes in Tamil

  • காலமெல்லாம் - ஆம்! உங்கள் ஆயுள் காலமெல்லாம், இதே நெருக்கம் அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்..
  • இருமனம் இணையும் திருமண வாழ்வில், சிறகை விரிக்கும் நீங்கள் பறவைகள் அல்ல..அன்பு என்னும் சிறகை விரித்து பறக்கவிருக்கும் உல்லாச பறவைகள்.. என் அன்பான வாழ்த்துகள்..!
  • செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்..!
  • அற்புதமான நாவலுக்கு போடப்படும் அழகான முன்னுரையே திருமணம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Wedding Anniversary Quotes in Tamil

  • வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல் இதயங்களை கோர்த்து கொள்ளுவதே திருமணம்.

இனிய திருமண நல்வாழ்துகள்

  • கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம். கனவும் நினைவாக வாழ்க்கையில்

நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

  • பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் போகும் பயணங்கள் இனித்திடும். அந்த

உயிர்களின் இணைவு திருமணம்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Wedding Anniversary Quotes in Tamil

  • இணைபிரியா தம்பதிகளாக நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ்க. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
  • வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிக சிறந்த நாளே உன் திருமண நாள். இன்று போல என்றும் உன் துணையுடன் சிறப்பாகக் கொண்டாடு. இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
  • இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில் திருமணம் என்னும் ஒரு வேரில் உறவு எனும் பூ பூத்து
  • அன்பு என்னும் காய் காய்த்து சந்தோஷம் என்னும் கனி தந்து எழில் கொஞ்சும் சோலையாய் வாழ வாழ்த்துகிறேன். இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

Wedding Anniversary Quotes in Tamil

  • பால் நிலவும், பகல் சூரியனும் நல்ல சொந்தங்களும் இனிய நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

  • திருமணம் என்ற பந்தத்தினால் குடும்பம் என்ற ஒன்றிலே இணையவிருக்கும் இந்த நல்ல நாள் இன்பமாகவும் ஊர் போற்றும் தம்பதியாக இணை பிரியாது வாழ வாழ்த்துக்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
  • இணைபிரியா வாழ்வில் இன்பமே என்றும் கொள்வீர். முடிச்சுப்போட்ட வாழ்க்கையில் முடிவிலா மகிழ்ச்சி காண்பீர். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
  • நாள் பாத்து பந்தலிட்டு இரு மனதிலும் கனவில் ஊஞ்சலிட்டு முற்றத்தில் வாழை மரம் நட்டு ஊர் சாட்சியாய் நடக்கும் உயிர்களின் புது உலகம் திருமணம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story