விஜய்யின் மநகூ 2.0...! வேற லெவல் ப்ளான்..! திமுகவுக்கு குடச்சல் ஸ்டார்ட்..!
விஜய்யுடன் இணைந்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என புதிய ஒரு கூட்டணி 2026ல் அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அப்படி உறுதியாகாவிட்டாலும் வேறொரு கணக்கும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விரைவில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார். முதல்முறையாக கள்ளக்குறிச்சி சென்று பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடத்தி அசத்தினார்.
விஜய் தனது கட்சியை இன்னும் பலப்படுத்தவே துவங்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் அவருக்கு பெரிய வாக்கு சதவிகிதம் எதுவும் கிடைக்கப்போவதில்லை என ஒரு தரப்பும், அவருக்கு 20 சதவிகிதம் கிடைக்கும் என விஜய் ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக அரசு மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் வைத்து வருகின்றனர். இதனால் அந்த கட்சி மீதான பொதுமக்களின் பார்வை கொஞ்சம் மாறி வருகிறது. குறிப்பாக பெண்கள் திமுகவின் திட்டங்களை பாராட்டி வரும் நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு சென்று திமுகவுக்கு எதிராக நாட்டு மக்களை பேச வைத்தனர். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கையில் கள்ளக்குறிச்சி விசயத்தால் திமுக மீது அதிருப்தி ஏற்பட்டதால் வருத்தத்தில் இருக்கிறார் முதல்வர்.
முதல்வரின் கோபப்பார்வை சொந்த கட்சிக் காரர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதும் விழுந்துள்ளதாம். தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உளவுத்துறையிடம் பல அறிக்கைகளைக் கேட்டிருக்கிறார் முதல்வர். கள்ளச்சாராய விவகாரம் குறித்த மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அரசுக்கு எதிரான மனநிலை எந்த அளவில் இருக்கிறது? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் மத்தியில் என்ன மதிப்பு இருக்கிறது கூடியிருக்கிறதா என பல அறிக்கைகளைக் கேட்டிருக்கிறார்கள். முதல்வர் கேட்டுள்ள தகவல்களில் முக்கியமான ஒன்றாக விஜய் குறித்த அப்டேட்டும் இருக்கிறதாம். அதாவது விஜய்க்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது. தொகுதியில் வெல்லும் அளவுக்கு இருக்கிறதா? எத்தனை தொகுதி வரைக்கும் வெல்ல சாத்தியம் உள்ளிட்ட பல விசயங்களைக் கேட்டிருக்கிறாராம்.
2026ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்னென்ன வாய்ப்புகளில் போட்டியிடலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
தனித்து போட்டி : தனித்து போட்டியிடும்போது ஆளுங்கட்சிக்கு வர வேண்டிய முதல் தலைமுறை ஓட்டைப் பிரிப்பார்.
அதிமுகவுடன் கூட்டணி : திமுகவுக்கு ஏற்கனவே எதிர்ப்பு ஓட்டுகள் இருப்பதால், அவையும் புதிய தலைமுறை ஓட்டுகளும் அப்படியே அதிமுகவுக்கு சென்றடையும்.
இவை நடந்தாலும் திமுகவுக்கு ஏதோ ஒரு வகையில் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தூண்டில் போட்டு தன் பக்கம் இழுத்து, விஜய் மெய்ன் கேமை ஆடத் துவங்குவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை தன் பக்கம் இழுக்க விஜய் நினைக்கலாம். அப்படி நடந்தால் அது மக்கள் நல கூட்டணி 2.0 என்றாகும்.
அல்லது இந்த கூட்டணி, அமைந்தால் அது திமுகவுக்குதான் ஆபத்து என்று முக்கிய பாய்ண்டை முன்வைத்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் பேரம் பேசும். இதனால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும்.
இப்படி விஜய்யின் வருகை எல்லா தரப்பிலிருந்தும் திமுகவுக்கு நெருக்கடிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu