பாகிஸ்தான் செய்ததை அப்படியே செய்யும் ஈரான்..!

பாகிஸ்தான் செய்ததை  அப்படியே செய்யும் ஈரான்..!
X

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 

பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை நடத்திய பின்பு ஒரு வருடம் பாகிஸ்தான் தன்னுடைய வான்வெளியை மூடி வைத்திருந்தது.

பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை நடத்திய பின்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் பாகிஸ்தான் பக்கம் எந்த விமானமும் வரக்கூடாது என வான்வெளி பயண அனுமதியை நிறுத்தி வைத்திருந்தது. அதையே இப்போது ஈரானும் செய்கிறது. ஒட்டுமொத்த வான்வெளி பயணங்களை நிறுத்தி அனைத்து விமானங்களையும் தரையிலே வைத்திருக்கிறது.

என்ன காரணம்? இரண்டு இடத்திலேயும் ஒரே காரணம் தான். அந்த நாடுகளிலே இருக்கும் ரேடார் என சொல்லப்படும் முன்னறிவிப்பு சாதனங்கள் எல்லாம் காயலான் கடை சமாச்சாரம் தான். ஆமாம் காயலான் கடைக்கு கூட போட முடியாத துருப்பிடித்த இரும்பு தான் அந்த முன்னறிவிப்பு சாதனங்கள் எல்லாம்.

எல்லாம் சீன தயாரிப்பு. அப்புறம் எப்படியிருக்கும்? சீனாவோட அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல் ஆறுமாதம் முன்பு துறைமுகத்திலே நிறுத்தியிருக்கும்போதே தானாக கடலுக்குள்ளே மூழ்கிடுச்சு. அது தனி சமாச்சாரம். ஈரான் சீனாவுடன் 250 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் போட்டு பெட்ரோலை சல்லிசாக ஏற்றுமதி செய்து கொண்டுள்ளது.

இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதலுக்கு அப்புறம் இந்தியாவில் இருந்து மனித தவறால் தற்செயலாக ஒரு பிரமோஸ் ஏவுகணையும் அனுப்பப்பட்டது. அந்த ஏவுகணை பாகிஸ்தானுக்குள்ளே 250 கிலோமீட்டர் பயணித்து, சுமார் அரைமணி நேரம் சுத்திட்டே இருந்தது. இந்திய விமானப்படை சொல்லித்தான் பாகிஸ்தானுக்கு அந்த விஷயமே தெரிந்தது.

கிட்டத்தட்ட பாகிஸ்தானில் 250 கி.மீ., பிரமோஸ் ஏவுகணை பறந்த பின்னரும் அந்த நாட்டின் முன்னறிவிப்பு ரேடார்கள் எல்லாம் தூங்கிக்கொண்டிருந்ததன. இதே ஏவுகணை சமாச்சாரம் தான் ஈரானிலும் உள்ளது. 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியும் ஒன்று கூட இஸ்ரேலின் எந்த இடத்தையும் தாக்கவில்லை. ஆமாம் ஒன்றே ஒன்று கூட எந்த இடத்தையும் துல்லியமாக தாக்கவில்லை.

அது எல்லாம் ஹைபர் சானிக் என சொல்லப்படும் ஒலியை விட அதிவேகமாக செல்லக்கூடிய அதி நவீன ஏவுகணைகளாம். இஸ்ரேல் பெரும்பாலான ஏவுகணைகளை நடுவிலே ஆகாயத்திலேயே தாக்கியே அழித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏவுகணை செய்யறது பெரிசில்லை. ஆனாலும் சரியாக குறிபார்த்து போய் தாக்கனும். அதை செய்ய முடியாது இல்லையா? சப்தத்தை விட அதிக வேகமாக வரும் ஏவுகணை ஆகாயத்திலேயே தடுத்து அழித்திருக்கிறது இஸ்ரேல். குறி தவறாமல், அதான் முக்கியம். இதே தான் அந்த ட்ரோன் உட்பட இத்யாதிகளுக்கும்.

துருக்கி, ஈரான் எல்லாம் ட்ரோன் எனும் தானியங்கி பறப்பான் சாதனங்களை செய்வதிலே வல்லவர்கள் திறமைசாலிகள் என்ற விமர்சனமும் இருந்தது. அந்த ட்ரோன்கள் எல்லாம் ரஷ்யா,உக்ரேன் போரிலே பயன்படுத்தப்படுகிறது எனவும் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஏன் அதை எடுத்து இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிடும் அமைப்புகளுக்கு கொடுத்து பார்க்கலாமே?

கொடுத்து பார்த்தார்கள் தான். இஸ்ரேலியர்கள் அந்த ட்ரோன்களை துப்பாக்கியால் சுட்டே வீழ்த்தி விட்டார்கள். அதெல்லாம் இங்கே சில்வண்டுகள் பட்டம் பறக்க விடும் சமாச்சாரம் தான். காத்தடிக்கும்போது பறக்க விட்டா கண்டிப்பாக எப்படியாவது பறக்கும் இல்லையா?

அதையும் அதிநவீன தொழில்நுட்பம் என சொல்லிக்கலாம். எது போர் விமானம்? எது பயணிகள் விமானம்? எனத் தெரியாத தொழில்நுட்பம் கொண்ட ரேடார், ஏவினா எங்கே போய் விழும் என தெரியாத ஏவுகணைகள், பறக்கவிட்டா தானாக எங்கேயாவது போய் விழும் ட்ரோன்கள் இப்படிப்பட்ட தகர டப்பாக்களை வைத்துக் கொண்டு தான், ஈரான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது. இதான் ஈரானின் அதிநவீன தொழில்நுட்பம். அதை வைச்சு இஸ்ரேலுக்கு எதிரா போர் செய்யுறாங்களாம்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்