தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும் : மத்திய அரசு வலியுறுத்தல்
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாகி உலகம் முழுதுவதுமே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தடுப்பூசிகள் வீணாகுவதை குறைத்தால் மட்டுமே மேலும் பலருக்கு தடுப்பூசி போட முடியும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தடுப்பூசி வீணாகுவது 1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.இதை மத்திய அரசு வேண்டுகோளாக கேட்டுக்கொண்டுள்ளது. இது நியாயமான, மிக அவசியமான மற்றும் செய்யக்கூடிய வேண்டுகோள் தான்.
தடுப்பூசி தயாரிப்புகளுக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது. ஆனால் நமக்கு இங்கு நிலவும் சூழலின் அடிப்படையில் வினியோகத்தை விட தேவை அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று நமக்கு முடிவுக்கு வரவேண்டும் என்றால் தடுப்பூசி என்ற ஆயுதம் நியாயமான முறையிலும், உகந்த முறையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். உலக அளவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், அவை வீணாவதை குறைப்பதன் மூலமாக இன்னும் பலருக்கு தடுப்பூசி போட முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu