இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்பு?
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய்தோவலும், கவர்னர் ஆர்.என்.ரவியும்.
இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக அதிபயங்கரவாதிகள் ஊடுருவலாம் எனும் செய்தி சில காலங்களாக உளவுத்துறை வழியாக சொல்லபட்டு சமீப காலங்களில் பதற்றம் அதிகரித்தது. ஏற்கனவே சில ஆண்டுக்கு முன் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் தாக்குதல் நடந்தபோதே இது அறிவுறுத்தபட்டது.
இப்போது நிலைமை மீண்டும் பரபரப்பாக மாறி உள்ளது, இலங்கையில் இருந்து இந்தியா வழியாக ஊடுருவி இந்தியாவில் நாசவேலைகளை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சீன உதவியோடும் இன்னும் அந்நிய சக்திகள் உதவியோடும் வரலாம் என பெரும் மிரட்டல் எழுந்தது.
இந்தியா இப்போது மிகுந்த பாய்ச்சலில் வளரும் நாடு. அதுவும் சீனாவில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைகளை எல்லாம் அள்ளிக்கொண்டு வளரும் நாடு. எதிர்காலம் இனி இந்தியாவுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது.
இதனால் பெரும் பெரும் தாக்குதல்களை நடத்தி இந்தியா பாதுகாப்பில்லா நாடு என செய்து இந்தியாவினை முடக்க பல நாடுகள் திட்டமிடுகின்றன, இங்கு மதம், இந்து தலைவர்கள் என எல்லாம் இலக்குவைக்கப்பட்டாலும், அந்நிய சக்திகளின் உண்மையான இலக்கு தேசத்தை முடக்குவது தான்.
இந்தியாவும் தன்னைபோல் ஆகவேண்டும் என விரும்பும் பாகிஸ்தானும் அதை தூண்டிவிடும் சீனாவும், பாகிஸ்தானில் இருந்து உலகம் முழுக்க தொடர்பு வைத்த ஜிகாதிகளும் இதற்கு உதவுகின்றனர். இன்னும் உக்ரைன் ரஷ்யபோரில் இந்தியா அறிவிக்கப்படாத பேச்சு நடத்துவதும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இந்தியா வர இருப்பதும் பல நாடுகளின் வயிற்றெரிச்சலை கிளப்பி உள்ளது.
இதனால் அந்த நாடுகள் இந்தியாவிற்கு எதிராக வெறிபிடித்து அலைகின்றன. இவர்கள் இலங்கை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதனை அறிந்து தான் இரு தினங்கள் முன்பு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலே நேரடியாக இலங்கை சென்றார். பின் அவர் அவசரமாக தமிழகம் திரும்பி தமிழக ஆளுநரை சந்தித்திருக்கின்றார்.
எந்த அளவுக்கு விஷயம் கடுமையான சூழலில் இருக்கிறது என்பதை அஜித்தோவல், கவர்னர் ஆர். என்.ரவியின் சந்திப்பு காட்டுகிறது. இந்த சந்திப்பின் மூலம் எங்கோ பெரிதாக புகைகின்றது. விரைவில் ஏதோ நடக்க இருக்கிறது. அதனை தடுக்க இந்தியா தீவிரமாக உழைத்துக் கொண்டு உள்ளது என்பதை அறியலாம்.
இந்திய மக்கள் விழிப்புடன் வாழும் நேரம் இது. இன்னும் 20 ஆண்டுகள் எப்படியாவது இந்தியா இதே வேகத்தில் தடைகளின்றி வளர்ந்து விட்டால், இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறி விடும். பொருளாதார வல்லரசாக மாறி விடும். எனவே இந்திய மக்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். நயமாக பேசி நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் இருந்து ஒதுங்க வேண்டும். நாட்டிற்கு எது நல்லது என்பதில் மிகவும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu