அந்தமானுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்
சென்னை விமான நிலையம்
கொரானா வைரஸ் தாக்கம், தற்போதைய ஒமிக்ரான் தொற்றின் வேகமாக பரவுதல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையத்திலிருந்து கொரோனா,ஒமிக்ரான் அதிக அளவில் பரவிவரும் கேரளா மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய நகரங்களுக்கும், அகமதாபாத், கோவா, சீரடி ஆகிய பெருநகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான பயணிகள் அனைவரும்,பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக ICMR அங்கீகாரம் பெற்ற பரிசோதனை கூடத்தில் RT-PCR டெஸ்ட் எடுத்து நெகடீவ் சான்றிதழ்களுடன் தான் பயணம் செய்ய வேண்டும்.நெகடீவ் சான்றிதழ் இல்லாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை.
சென்னையிலிருந்து மற்ற நகரங்களுக்கு பயணிக்கும் உள்நாட்டு பயணிகள்,கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டு இருக்க வேண்டும். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 15 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்கள் இருந்தால் தான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இந்த விதிமுறைகள் ஏற்கனவே அமுலில் உள்ளது.
தற்போது புதிதாக சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் உள்நாட்டு பயணிகளுக்கும் RT-PCR டெஸ்ட் நெகடிவ் சான்றிதழ் நாளை 5ஆம் தேதியிலிருந்து கட்டாயம் என்று என்று சிவில் ஏவியேஷன் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதனால் சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் 5 விமானங்களில் பயணிக்கும் பயணிகளும் நாளையிலிருந்து RT-PCR டெஸ்ட் நெகடீவ் சான்றிதழ்கள் இருந்தால் தான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.
மேலும் இந்த உள்நாட்டு விமானங்களில் பெற்றோரோடு பயணிக்கும் குழந்தைகளுக்கும் RT-PCR டெஸ்ட் நெகடீவ் சான்றிதழ்கள் கட்டாயம்.2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக டெஸ்ட் எடுக்க வேண்டும்.சில விமானநிறுவனங்கள் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் டெஸ்ட் சான்றிதழ்கள் கேட்டபதாக கூறப்படுகிறது. அது தவறு 24 மாதங்கள் நிறைவடைந்த 2 வயது குழந்தைகளுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu