ஜனாதிபதி, பிரதமர், எம்.பி.,க்கள் சம்பளம், சலுகைகள் என்னென்ன?

ஜனாதிபதி, பிரதமர், எம்.பி.,க்கள் சம்பளம், சலுகைகள் என்னென்ன?
X

President, Prime Minister, MP's Salary, Perks- ஜனாதிபதி, பிரதமர், எம்.பி.,க்கள் சம்பளம், சலுகைகள் ( கோப்பு படங்கள்)

President, Prime Minister, MP's Salary, Perks- புதிய மக்களவை செயல்பட தொடங்கி உள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்க அரசு செய்யும் செலவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

President, Prime Minister, MP's Salary, Perks- பல கோடி ரூபாய் செலவு செய்து ஒவ்வொருவரும் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நாட்டின் முதல் குடிமகன் என்ற முறையில் ஜனாதிபதிக்கு மாதம் 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. முப்படைகளின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி வாங்கும் சம்பளத்திற்கு, வருமான வரி கிடையாது. இது தவிர இலவச வீடு, உலகம் முழுக்க இலவச விமான பயணம், இலவச ரயில் பயணம், மாதம் ஒரு லட்சம் ரூபாய் அலுவலக செலவு, இலவச மருத்துவ வசதி, இலவச மொபைல் போன், பாதுகாப்பு என்று ஏராளமான சலுகைகள் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. பயணத்தின் போது தன்னுடன் ஒருவரை அழைத்துச் செல்ல முடியும். ஜனாதிபதி ஓய்வு பெற்ற பிறகு அவர் விரும்பும் இடத்தில் நிரந்தரமாக வாடகை இல்லாத வீடு, இரண்டு லேண்ட் லைன் போன் நம்பர்கள், ஒரு மொபைல் நம்பர், வேலைக்கு 5 பேர், விமானம், ரயிலில் இலவச பயண சலுகைகள் வழங்கப்படும்.

துணை ஜனாதிபதிக்கு என்று தனிப்பட்ட முறையில் சம்பளம் எதுவும் வகுக்கப்படவில்லை. ஆனால் துணை ஜனாதிபதி ராஜ்ய சபையில் தலைவராக இருப்பதால், அதற்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இலவச வீடு, மருத்துவ வசதி, போன், மொபைல் போன், போக்குவரத்து வசதி என அனைத்தும் துணை ஜனாதிபதிக்கு இலவசம் தான். ஓய்வுக்கு பிறகு ரூ.1.5 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும்.

பிரதமர் நாட்டில் அதிக அதிகாரம் படைத்த பிரதமருக்கு மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இது தவிர பாராளுமன்ற படியாக மாதம் ரூ.45 ஆயிரமும், செலவு படியாக ரூ.3 ஆயிரமும், தின படியாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் அரசு விமானங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் இலவசமாக பயன்படுத்துதல், இலவச வீடு, அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம் என சலுகைகளை அடுக்கிக்கொண்டே செல்ல முடியும். பிரதமருக்கு கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு உண்டு. ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் வீடு, ஓய்வூதியம் வழக்கம்போல் கிடைக்கும்.

எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதோடு பாராளுமன்ற கூட்டம் மற்றும் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சாலையில் பயணம் செய்ய ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.16 பயணப்படி வழங்கப்படுகிறது. இது தவிர தொகுதி செலவாக மாதம் 45 ஆயிரமும், அலுவலக செலவாக 45 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதோடு ஒரு ஆண்டுக்கு 34 முறை விமானத்தில் இலவசமாக பயணம் செய்து கொள்ள முடியும். இதில் எம்.பி-யும், அவரது குடும்பத்தினரும் பயணம் செய்ய முடியும். ரயிலில் முதல் வகுப்பில் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

ஐந்து ஆண்டுகளுக்கு இலவச வீடு, வருடத்திற்கு 1.50 லட்சம் தொலைபேசி அழைப்புகள் இலவசமாக கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டும் எம்.பி.யாக இருந்தவருக்கு ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக எம்.பி-யாக இருந்தவர்களுக்கு வருடத்திற்கு 2 ஆயிரம் வீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா