3 ஆண்டுகள் பெண்ணின் இடுப்புத் தசையில் இருந்த ஊசி..!

3 ஆண்டுகள் பெண்ணின் இடுப்புத் தசையில் இருந்த ஊசி..!
X

பெண்ணின் இடுப்பு தசையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியுடன்  மருத்துவர்.

பெண்ணின் இடுப்புப்பகுதி தசையில் மூன்று ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிக்கலான ஊசியை மருத்துவ நிபுணர்கள் வெளியே எடுத்து சாதனை செய்துள்ளனர்.

Needle Lodged in Woman’s Buttock for Three Years, Doctors,Sir Ganga Ram Hospital,Delhi,Needle,Woman,Buttock

அரிதான மற்றும் சிக்கலான மருத்துவ பிரச்னையில் , தையல் செய்யும் போது, ​​ரம்பா தேவி என்ற பெண்ணின் இடுப்பு தசைக்குள் புகுந்து மூன்று வருடங்களாக ஆழமாக பதிந்துகிடந்த ஊசியை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் வசிக்கும் ரம்பா தேவி, தையல் வேலையில் ஆழ்ந்து மூழ்கி இருந்தபோது படுக்கையில் ஒரு கணம் ஊசியை வைத்தார். பின்னர் அதை மறந்து போனார். வேறு எதையோ செய்ய எழுந்து நின்றார். அப்போது திடீரென சரிந்து அருகில் இருந்த படுக்கையில் விழுந்தார். அவ்வாறு விழுந்தபோதது அவர் சுருக் என கடுமையான வலியை உணர்ந்தார். ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தார்.

Needle Lodged in Woman’s Buttock for Three Years

ஊசியின் பாதி உடைந்து படுக்கையில் கிடந்தது. மற்ற பாதி அறையில் எங்காவது உடைந்து விழுந்திருக்க வேண்டும் என்று ரம்பா தேவி நினைத்துக்கொண்டார்.

பல நாட்கள், ஊசியின் காணாமல் போன துண்டை அவர் தேடினார். அது எங்கோ தவறி விழுந்துவிட்டது என்று அதை அப்படியே விட்டுவிட்டார். அதைக் கண்டுபிடிக்க முடியாமல், அவர் இறுதியில் கைவிட்டு தன் வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார். இருப்பினும் அவள் பிட்டத்தில் தொடர்ந்து ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்ந்தார். அது ஆண்டுகள் கடந்தபோது அதிகரித்துக்கொண்டே இருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வலி ​​தாங்க முடியாததாக மாறிவிட்டது. இனிமேல் தாங்கமுடியாது என்று உணர்ந்த ரம்பா தேவி ​​​​மருத்துவ உதவியை நாட முடிவு செய்தார். அவ்வாறு மருத்துவரைச் சந்தித்தபோது அவருக்கு வலி நிவாரணிகளைக் கொடுத்து அனுப்பிவிட்டனர். இப்படி பல மருத்துவர்களைச் சந்தித்தும் பலனில்லை. இறுதியாக, ஒரு மருத்துவர் ஒரு எக்ஸ்ரேயை எடுக்க பரிந்துரைத்தார்.

Needle Lodged in Woman’s Buttock for Three Years

அந்த ஒரு எக்ஸ்ரே எதிர்பாராத கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது: தொலைந்து போனதாக ரம்பா தேவி நினைத்துக்கொண்டிருந்த "ஊசி" இத்தனை ஆண்டுகளாக அவரது தசைக்குள் புகுந்தது ஆழமாக பதிந்திருந்தது.

அந்த ஊசியை அகற்ற வேண்டும் என்று தீர்மானித்த ரம்பா தேவி பல மருத்துவர்களைச் சந்தித்தார். தசையில் ஊசி மிகவும் ஆழமாக இருப்பதாகவும், அந்த பகுதியில் பல முக்கியமான நரம்புகள் இருப்பதாகவும், தசைக்கு அருகில் அறுவை சிகிச்சை செய்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கூறினர். அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டனர். ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை.

இறுதியாக, அவரது வலியுடன் கூடிய நீண்ட அலுப்பான பயணம், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் தருண் மிட்டலிடம் அவரை அழைத்துச் சென்றது. அவர் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு ரம்பா தேவிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் " எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலம் இமேஜிங் செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு முன்னதாக கவனமாக திட்டமிட்டு, அவர்கள் ஒரு சி - ஆர்ம் மெஷின் - எக்ஸ்ரே தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்பட்ட மருத்துவ இமேஜிங் சாதனத்தைப் பெற்றனர்.

Needle Lodged in Woman’s Buttock for Three Years

அறுவைச் சிகிச்சைக்கான கீறல் எடுத்து, துண்டிக்கத் தொடங்கிய பிறகு, ஊசியைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. ஊசியை துல்லியமாகக் கண்டறிய பல எக்ஸ்-கதிர்கள் உள்நோக்கி எடுக்க வேண்டியிருந்தது. இறுதியாக, குழு ஊசியைக் கண்டுபிடித்து. அதை உடைக்காமல் ஒரே துண்டாகப் பிரித்தெடுத்தது. இது மிகவும் சிக்கலான பணியாக இருந்தது. ஆனால் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் குழுப்பணி பலனளித்தது" என்று அவர் ஊசியைப் பிரித்தெடுக்கும் பயணத்தை விளக்கினார்.

ரம்பா தேவியின் அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் தருண் மிட்டல், டாக்டர் ஆஷிஷ் டே, டாக்டர் அன்மோல் அஹுஜா, டாக்டர் தனுஸ்ரீ மற்றும் டாக்டர் கார்த்திக் ஆகியோரின் திறமை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக, ஊசியை வெளியே எடுக்க முடிந்தது. மேலும் அவரது சோதனையம் முழுமையாக முடிந்தது.

Needle Lodged in Woman’s Buttock for Three Years

இந்த அசாதாரண சம்பவம் அசாதாரண காயங்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவியை எப்பொழுதும் பெறவும், தொடர்ந்து அசௌகரியத்தை புறக்கணிக்காமல் இருப்பதற்கான பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. இது மருத்துவ அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களுக்கு ஒரு சான்றாகவும் விளங்குகிறது.

Tags

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி