69-வது பிலிம்ஃபேர் விருதுகள்: சிறந்த படம் ‘12த் ஃபெயில்’, சிறந்த நடிகர் ரன்பீர்

69-வது பிலிம்ஃபேர் விருதுகள்: சிறந்த படம் ‘12த் ஃபெயில்’, சிறந்த நடிகர் ரன்பீர்
69-வது பிலிம்ஃபேர் விருதுகள் விழாவில் ‘அனிமல்’ படத்துக்காக ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது

69வது பிலிம்ஃபேர் விருதுகள் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. இதனை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் பாலிவுட் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

பிலிம்ஃபேர் 2024 விருதுகள் வெற்றியாளர்கள்:

சிறந்த படம் - 12த் ஃபெயில்

சிறந்த படம் (விமர்சகர்கள் தேர்வு) - ஜோரம்

சிறந்த இயக்குநர் - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)

சிறந்த நடிகர் - ரன்பீர் கபூர் (அனிமல்)

சிறந்த நடிகை - ஆலியா பட் (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) - விக்ராந்த் மாஸ்ஸே (12த் ஃபெயில்)

சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) - ராணி முகர்ஜி (மிஸ்ஸஸ் சாட்டர்ஜி vs நார்வே), ஷெஃபாலி ஷா (த்ரீ ஆஃப் அஸ்)

சிறந்த உறுதுணை நடிகர் - விக்கி கவுஷல் (டன்கி)

சிறந்த உறுதுணை நடிகை - ஷபானா ஆஸ்மி (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)

சிறந்த பாடல் வரிகள் - அமிதாப் பட்டாச்சார்யா (‘ஸாரா ஹட்கே ஸாரா பச்கே’ படத்தின் ‘தேரே வாஸ்தே’ பாடல்)

சிறந்த இசை ஆல்பம் - அனிமல்

சிறந்த பின்னணி பாடகர் - பூபிந்தர் பாபல் (’அனிமல்’ படத்தின் ’அர்ஜன் வைல்லி’ பாடல்)

சிறந்த பின்னணி பாடகி - ஷில்பா ராவ் (’பதான்’ படத்தின் ’பேஷாராம் ரங்’ பாடல்)

சிறந்த கதை - அமித் ராவ் (OMG 2)

சிறந்த திரைக்கதை - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)

சிறந்த வசனம் - இஷிதா மொய்த்ரா (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி). என பட்டியல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story