இந்தியா எப்போது அடிக்கும் ? கடும் அச்சத்தில் பாகிஸ்தான்

இந்தியா எப்போது அடிக்கும் ?  கடும் அச்சத்தில் பாகிஸ்தான்
X

தேஜாஸ் விமானத்த்தில் பயணம் செய்யத்  தயாரான பிரதமர். (பழைய படம்)

காஷ்மீரில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எப்போது திரும்ப அடிக்கும் என பாகிஸ்தான் கலங்கிப்போய் உள்ளது.

பாகிஸ்தான் நாட்டினர் இப்போது பெரும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். காரணம் கட்ரா. காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு செல்லும் வழியில் உள்ள இடத்தில், கட்ராவில் வைத்து தீவிரவாத தாக்குதலை நடத்தியிருப்பதற்கு இந்தியா நிச்சயம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தும் என திடமாக நம்புகிறார்கள் அவர்கள். அப்படி தாக்கினால் அது தேஜாஸ் போர் விமானத்தை கொண்டு தான் என்கிறார்கள். அதில் தான் விஷயமே அடங்கி இருக்கிறது.

ஏன்..? இந்த குறிப்பிட்ட விமான ரகத்தின் மீது அவர்களின் பார்வை. இந்த உலகின் நம்பத் தகுந்த ஒற்றை இஞ்சின் கொண்ட இலகு ரக போர் விமானம் என்றால் அது நமது இந்திய HAL நிறுவன தயாரிப்பு LCA விமான ரகம் மட்டுமே. பின்னாளில் அதற்குத்தான் தேஜாஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இது முதன் முதலில் பறந்த போது பாகிஸ்தான் அதனை பார்த்து சமோசா என்றது. அதன் ஏரோ டைனமிக்ஸ் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் தேஜாஸ் சாதித்தது அதிகம். அதன் எடை தூக்கும் திறன் மற்றவர்களை வாயடைக்கச் செய்தது.அதில் பொருத்தக்கூடிய இல்லை பொருந்தக்கூடிய ஏவுகணைகள் ஏராளம் இருக்கின்றது. உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு ஏவுகணைகளை அநாயாசமாக பொருத்தி, கொண்டு சென்று தாக்குதல் நடத்த முடியும்.


இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் சமயத்தில் வேண்டும் என்றே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வைத்து ஒரு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இப்படி செய்தது அங்கு உள்ள தீவிரவாத அமைப்பு என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் பின்னணியில் பாகிஸ்தானிய முன்னாள் ராணுவத்தினர் இருப்பதாக சந்தேகிக்கிறார்கள் நம்மவர்கள்.

தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ள நம் இந்திய ராணுவம், தனது பிரத்தியேக படையணியான RAF ரஃபிட் ஆக்ஷ்ன் போர்ஸை களமிறக்கி இருக்கிறார்கள். பிரதமரின் அலுவலக உத்தரவின் பேரில் NIA நேரடி கண்காணிப்பில் NSG வந்திருக்கிறது என்கிறார்கள். இது கொஞ்சம் அதிரடியானதாக அவதானிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல மீண்டும் ஒரு எல்லை தாண்டிய தாக்குதல் நடவடிக்கையை பாகிஸ்தானிய தரப்பில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் தேஜாஸ் விமானங்களை இதில் எதிர்பார்க்கிறார்கள் என்பது தான் சுவாரஸ்யமான அம்சமாகிறது.

நம் இலகு ரக தேஜாஸ் விமானங்களை கொண்டு இதுவரையில் எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையில் நேரிடையாக ஈடுபடுத்தியதில்லை. தவிர அதற்கு இருக்கும் ஏற்றுமதி வாய்ப்புகளை பாகிஸ்தானை வைத்து பின்னணியில் சீனா ஏடாகூடம் செய்து வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் போல் இந்தியா இந்த முறை தேஜாஸ் விமானங்களை கொண்டு வந்து ஒரு எல்லை தாண்டிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடும் என பல மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புக்கள் பாகிஸ்தானிய ஆளும் தரப்பை எச்சரிக்கை செய்ய, பாகிஸ்தானுக்கு கிலி பிடித்துக் கொண்டு விட்டது என்கிறார்கள்.

இதனால், இது நாள் வரை மௌனம் காத்து வந்த பாகிஸ்தானிய பிரதமர் ஷெப்பா-ஷரீப் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று அலுவலகம் வந்த சமயத்தில் வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த ஒற்றை வரி வாழ்த்து செய்தியை பார்த்து விட்டே பிரதமர் அலுவலகம் களத்தில் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த வார இறுதிக்குள் அநேகமாக ஒரு நல்ல செய்தி வரலாம். அஃது பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியதாகவும் எடுத்து கொள்ளலாம் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.

இது ஒரு புறம் இருக்க....

தேஜாஸ் Mk 1A தனது முதல் பறத்தல் சோதனையை கடந்த வாரம் பெங்களூரில் இருந்து நடத்தியது. மொத்தம் 83 விமானங்களை இந்த ரகத்திலும் 97 விமானங்களை மாக் 2 ரகத்திலும் தயாரிக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்சமயம் ஆண்டிற்கு 24 விமானங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இஃது வரும் ஆண்டுகளில் 30 விமானங்கள் என்கிற இலக்கை அடையும்.

அடுத்ததாக பிரஞ்சு நிறுவன தயாரிப்பு 28 ரபேல் M சீரிஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு நீண்ட இழுபறிக்கு பிறகு இருதரப்பினரும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். முன்பு வாங்கிய விலையை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. உடனே கொஞ்ச நாள் கழித்து இங்குள்ள சில கூகைகள் பொங்கிட கூடும். ஆனால் விலை அதிகமான இந்த ரபேல் M விமான தொகுதி இந்திய கடற்படைக்கானது.தவிர இது F3 -F4 வரிசையில் வருகிறது. கூடவே தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள சம்மதித்து இருக்கிறது சாப்ரான் நிறுவனம்.

பாதி விமானங்களை இங்கு நம் இந்திய தேசத்தில் தான் தயாரிக்கப் போகிறார்கள். வருங்காலங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இஞ்சினில் திருத்தம் செய்யவும் அதாவது நம் இஞ்சினியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள்.

இது மிகப்பெரிய விஷயம்.

அமெரிக்க லாக்ஹீட் மார்டீன் நிறுவனம் தனது பிரஸ்டீஜியஸ் CJ ஹெர்குலஸ் விமானங்களை நம் இந்திய தேசத்தில் தயாரிக்க ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இது உலக அளவில் கனரக ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்களாக பெயர் பெற்றவையாகும். ஏற்கனவே நம் நாட்டில் ரஷ்ய தயாரிப்பு சுகோய் சூ விமானங்களை முறையாக லைசென்ஸ் உரிமம் பெற்று தயாரித்து வருகிறோம்.

உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் HAL நிறுவன இலகு ரக தேஜாஸ் விமானங்களை தனியே தயாரித்து வருகிறோம். இது போக அமெரிக்க போயிங் நிறுவன விமானங்களின் உதிரி பாகங்களை இங்கு தான் உற்பத்தி செய்து தருகிறோம்.

இதனோடு கூடவே இப்பொழுது பிரஞ்சு நிறுவன தயாரிப்பு ரபேல் விமானங்களும் அதனோடு கூடவே லாக்ஹீட் மார்டீன் நிறுவன தயாரிப்பு விமானங்களும் இங்கேயே உற்பத்தி செய்ய இருக்கிறார்கள் என்றால் எப்பேர்ப்பட்ட பல்முனை செயல்பாட்டிற்கு இது வழிவகுக்கும் என யூகித்துப் பாருங்கள். நிச்சயம் ஒளிமயமான எதிர்காலம் நம் கண்களுக்கு பிரகாசமாக, மிக நன்றாகவே தெரியும்.

2032 ஆண்டில் நம் வசம் குறைந்த பட்சம் ஆயிரம் புத்தம் புதிய போர் விமானங்கள் தயார் நிலையில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும்மில்லை. ஏனெனில் நம் சொந்த இந்திய தயாரிப்பில் AMCA சீரிஸ் விமானங்கள் மற்றும் MMRCA சீரிஸ் விமானங்கள் வேறு மாதிரி வடிவங்கள் முழுமை பெற்று உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கிறது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா