1,000,00 செறிவூட்டிகள் : ஆக்சிஜனுக்கு ஆக்சிஜன் தரும் பிரதமர்
பிரதமர் மோடி
பிரதமரின் நல நிதியில் இருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும், மருத்துவ ஆக்சிஜன் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க பிரதமர் ஒப்புதல் அளித்தார். மேலும், அவைகளை உடனே விரைவாக கொள்முதல் செய்து, கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு விநியோகிக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
பிரதமரின் நல நிதியில் இருந்து, ஏற்கனவே 713 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் 500 ஆக்சிஜன் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆக்சிஜன் நிலையங்கள் மூலம் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 2ம் கட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்காக டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆர் தயாரித்த தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu