டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு : 60 நோயாளிகள் கவலைக்கிடம்

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு :  60 நோயாளிகள்  கவலைக்கிடம்
X

டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். (மாதிரி படம்)

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றன.கொரோனா பாதிப்பால் டெல்லி பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. கொரோனா நோயாளிகள் அனுமதிக்க படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று டெல்லி அரசு தவிப்பில் தள்ளாடுகிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தில் 'பிச்சை எடுத்தாலும், திருடினாலும் பரவாயில்லை. மக்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்.' என்று கூறியிருப்பது டில்லியின் எதார்த்த நிலையை படம்பிடித்து காட்டியுள்ளது.

இந்த நிலையில், டெல்லி கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பல நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பதாவது: ஆக்சிஜன் 2 மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். வெண்டிலேட்டர்கள், பிபப் உபகரணங்கள் முழுமையாக செயல்படவில்லை. மிக அவசரமாக,அவசியமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!