ஜெகனுக்கு சிறப்பு சலுகை! பெருந்தன்மையுடன் சந்திரபாபு
சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்ட ஜெகன் மோகன் கார்
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் இருந்த போது, முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவை படாதபாடு படுத்தினார். அவரை சிறைக்கெல்லாம் அனுப்பி வைத்தார். ஜெகன் படுத்திய பாட்டில், தவித்துப்போன சந்திரபாபுநாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதறி அழுதார்.
Kalki 2898 AD தெலுங்குல அவரு, மலையாளத்தில் இவரு... அப்ப தமிழ்ல..! மொத்தம் எத்தனை பேருப்பா...?
இப்படி பிரச்னை சென்று கொண்டிருக்கையில், முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு சந்திரபாபு நாயுடுவை இந்த சிக்கல்களில் இருந்து முழுமையாக மீட்டு எடுத்தார். அதனால் சந்திரபாபுநாயுடுவுக்கு, பா.ஜ.க.,வுடனும், பவன் கல்யாணுடனும் ஏற்பட்ட கூட்டணி மூலம், இப்போது நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு, அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.
மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபுநாயுடு தன்னை பழிவாங்குவாரோ, தன்னை சிறையில் தள்ளுவாரோ என ஜெகன் பெரும் அச்சத்தில் இருக்கிறார். இந்நிலையில் ஆந்திரமாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
ஏற்கனவே ஜெகன் முதல்வராக இருந்த போது, சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்ட சந்திரபாபுநாயுடு, இனி நான் இந்த சபைக்குள் நுழைந்தால், முதல்வராகத்தான் நுழைவேன் என சபதமிட்டார். தனது சபதத்தை நிறைவேற்றி சந்திரபாபுநாயுடு, முதல்வராகவே உள்ளே வந்தார். சட்டசபைக்குள் வந்தவுடன் சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டியிடம் கை காட்டி சைகை காட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ஆந்திர சட்டசபை விதிகளின்படி விதிமுறைகளின்படி, ஜெகனின் கார் சட்டசபை வாயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவரும் மற்ற எம்.எல்.ஏ.க்களை போல வெளி வளாகத்தில் இருந்து நடந்து வர வேண்டும்.
ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவராக கூட ஜெகன் இல்லை. வெறும் எம்.எல்.ஏ.,வாக மட்டுமே இருக்கிறார். வழக்கமாக எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தின் வாசலில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து சட்டசபைக்குள் நடந்து வர வேண்டும். இந்த விதிமுறையினை உருவாக்கியதே ஜெகன்மோகன் தான். இப்போது இந்த விதிமுறையே அவருக்கு பெரும் நெருக்கடியினை கொடுத்தது.
கமல்ஹாசன் துணையோடு பிரபாஸ் ஜெயித்தாரா? கல்கி 2898 ஏடி திரைவிமர்சனம்!
ஆனால், ஜெகன் இப்படிப்பட்ட சங்கடத்தை சந்திப்பதை முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்பவில்லை. இதனால் ஜெகனின் காரை கேட் வழியாக சட்டசபை வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தார். ஜெகன் உருவாக்கிய கடுமையான நடைமுறையை ஜெகனுக்காகவே தற்போதய முதல்வர் சந்திரபாபு நாயுடு தளர்த்தியதன் மூலம், ஜெகன்மோகன் பெரும் சங்கடத்தில் இருந்து தப்பினார்.
மேலும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்றதும் ஜெகன் பதவியேற்றார். உண்மையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பெயரின் முதல் எழுத்தின்படியே பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும். ஆனால் அந்த விஷயத்திலும் சந்திரபாபு தாராளமாக நடந்து கொண்டார். இதெல்லாம் ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுத்து முதல் நாளே தொடங்கப்பட்டது
இதன் மூலம் ஜெகன்மோகனை நான் மதிக்கிறேன் என்ற செய்தியை சந்திரபாபு நாயுடு மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார். இதே நிலை தொடர்ந்தால், ஜெகன் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் வராது. சந்திரபாபுநாயுடு பழிவாங்க நினைத்தால் நிச்சயம் ஜெகனுக்கு சிறை தான் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu