கூட்டணி இல்லாவிட்டாலும் பா.ஜ.க., வெற்றி பெறும்
பாஜகவுடன் வாக்கு வங்கி உள்ள பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி சேரவில்லை. இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளும், ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக ஆகியவை மட்டுமே இதுவரை அந்த கூட்டணியில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே பாஜகவுக்கும் பெரிய வாக்கு வங்கி இல்லாத நிலையில் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் படி தமிழ்நாட்டில் 36 இடங்களுக்கும் மேல் திமுக கூட்டணி வெல்லும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அதற்கு மாற்றாகக் கருத்து கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இரட்டை இலக்கங்களில் வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது கணிப்பை தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர் 'பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கூறுவது போல இந்தியாவில் 370 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது கடினம்' என்றும், 'தமிழ்நாட்டில் இரட்டை இலக்கங்களில் பாஜக வெற்றி பெறும்' எனவும் அவர் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.
தமிழக எம்.பி.,க்கள் இதுவரை டெல்லிக்கு சென்று எதுவும் சாதிக்கவில்லை. தவிர இப்போது நடைபெற உள்ள தேர்தல் நாட்டிற்கு பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். எனவே தமிழக மக்கள் பிரதமர் மோடியை விரும்புகின்றனர். பிரதமர் மோடிக்காக அவர்கள் பா.ஜ.க.,வுக்கு நிச்சயம் ஒட்டளிப்பார்கள். இந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதமும் அதிகரிக்கும். பா.ஜ.க., தற்போது உள்ள நிலையில் போட்டியிட்டாலும், இரட்டை இலக்கங்களி்ல் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலம், தென் மண்டலம், சென்னை மண்டலம் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் ஆதரவாக உள்ளது எனவும் அந்த கணிப்பில் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu