மகாராஷ்டிராவில் தாய்க்காக வீட்டின் அருகே கிணறு தோண்டிய 14 வயது மகன் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிராவில் தாய்க்காக வீட்டின் அருகே கிணறு தோண்டிய 14 வயது மகன் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
X

தாய்க்காக தோண்டப்பட்ட கிணறும் மகனும்.

14 வயதான பிரணவ் சல்கர்,தனது தாய் தண்ணீர் எடுப்பதற்காக வெயிலில் வெகுதூரம் நடந்து செல்வதை பார்த்துவிட்டு தனது வீட்டின் முன் கிணறு தோண்டியுள்ளார்.

ஒரு தாயின் கஷ்டத்தை உணர்ந்த மகனின் பாசத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே இந்த சம்பவத்தை அனைவரும் பார்க்கிறார்கள். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் கிடைக்கும் என்பதை மகாராஷ்டிர சிறுவன் இதன் மூலமாக நிரூபித்துள்ளார்.

குடும்பத் தேவைக்காக தண்ணீர் எடுப்பதற்கு வெயிலில் வெகுதூரம் கையில் பானையுடன் நடந்து சென்று சிரமப்படுவதைக் கண்டு மனம் உடைந்த 14 வயது பிரணவ் சல்கர் தனக்குள் ஒரு முடிவெடுத்தான். தனது தாய் கஷடப்படக்கூடாது என்பதற்காக வீட்டின் முன் முற்றத்தில் கிணறு தோண்டினார்.


மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் இந்த மாணவன் தனது முன்மாதிரியான பணியால் கிராம மக்களை மட்டுமல்ல இன்று நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.

பிரணவின் தாயார் தர்ஷனா கூறுகையில், தண்ணீர் பிரச்னைக்கு தற்போது நிவாரணம் கிடைத்துவிட்டது என்றார் கண்ணீர்மல்க.

இதற்கிடையில், இந்த பணியில் தனது மகனுக்கு உதவிய பிரணவின் தந்தை விநாயக், "கிணறு தோண்டும் பணியின் போது கற்களை அகற்ற மட்டுமே நான் உதவினேன். மற்றபடி நான் வேறு எதுவும் செய்யவில்லை. இப்போது மகன் தோண்டிய கிணற்றை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.' என்று கூறினார்.

விநாயக் மற்றும் அவரது மனைவி தர்ஷனா ஆகியோர் தனது குடும்பத்துடன், கெல்வே அருகே உள்ள பழங்குடியின கிராமமான தவங்கே படாவில் வசித்து வருபவர்கள். அவர்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்லவேண்டும். இந்த வலியை உணர்ந்த அவர்களது மகன் பிரணவ் முயற்சி எடுத்து அவர்களது வீட்டின் முன்புறத்தில் கிணறு தோண்டியுள்ளார். அதில் தற்போது தண்ணீரும் வந்துவிட்டது.

இந்த கிணறு சம்பவத்தை அறிந்த ஜில்லா பரிஷத் அதிகாரிகள் சிறுவன் பிரணவுக்கு பாராட்டு விழா நடத்தி அவனை பாராட்டி உள்ளனர். சிறுவன் அவனது தாயாருக்காக செய்த முன்மாதிரியான பணியைப் பாராட்டி ரூ.11,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

பிரணவின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது

வீட்டுக்குத் தண்ணீர் எடுக்க வெயிலில் நீண்ட தூரம் நடந்து செல்லும் தனது தாயாரை பிரணவ் காண சகிக்காமல் இப்படி ஒரு சாதனையை செய்துள்ளான். அவனது இந்த செயலால் அவனது தாயின் அனைத்து கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

ஜில்லா பரிஷத் தலைவர் பிரகாஷ் நிகம் தலைமையில் பிராணவுக்கு நடந்த பாராட்டுவிழாவில் , ஜில்லா பரிஷத் தலைவர் கூறுகையில்,


'இந்த பாராட்டு விழாவில் ஷபரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பிரணவ் குடும்பத்திற்கு வீடு வழங்க உத்தரவிடுகிறேன். இத்திட்டத்தின் கீழ், பழங்குடியினருக்கு செங்கல் மற்றும் காரை வீடுகள் வழங்கப்படுகின்றன. பிரணவ் இன்றைய "ஷ்ரவன்பால்" ஆவான். ராமாயண காவியத்தில் தனது பார்வையற்ற பெற்றோரைத் தோளில் சுமந்து புனித யாத்திரை சென்ற அர்ப்பணிப்புள்ள மகனாக பிரணவ் இருக்கிறான்.

பிரணவ் தனது தாய்க்கு செய்த கடினமான வேலை தனது தாயின் மீதான பாசத்தின் அர்ப்பணிப்பு. எல்லா குழந்தைகளும் அந்த முன்மாதிரி சிறுவனிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

இந்த இணைப்பில் வீடியோ உள்ளது.'க்ளிக்' செய்து பாருங்கள்.

https://twitter.com/ANI/status/1660836388982652929?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1660836388982652929%7Ctwgr%5E48bb861feea7c2df281e9ec13c0eb099ff95e297%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.republicworld.com%2Findia-news%2Fgeneral-news%2F14-yr-old-doting-son-digs-well-near-home-for-mothers-convenience-in-maharashtra-articleshow.html

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்