ஐ.நா.,வில் சாதித்த இந்தியா..! பாகிஸ்தான் மௌனம்..??

ஐ.நா.,வில் சாதித்த இந்தியா..!  பாகிஸ்தான் மௌனம்..??

ஐநா சபையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைவது குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.

முன்பெல்லாம் இந்தியாவின் காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் ஐநாவில் புகார் எழுப்பும். இந்தியா அங்கே 370 சட்ட பாதுகாப்பு உண்டு. முழு மரியாதை காவல் உண்டு. அது சிறப்பு அந்தஸ்து பகுதி என சொல்லி முணுமுணுத்து விட்டு தலையினை கவிழ்ந்து கொள்ளும்.

பின்பு பாகிஸ்தான் அங்கே தனிநாடாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கும். சீனா ஆமாம் சொல்லும். ரஷ்யா கள்ளத்தனமாக அமைதியாகும். அமெரிக்கா குதூகலிக்கும். இப்படியெல்லாம் காட்சிகள் இருந்தன.

இப்போது அதே ஐநாவில் "காஷ்மீர் இந்தியாவின் பகுதி. அதன் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது அதை மீட்கும் வரை ஓயமாட்டோம்" என முழங்கி இருக்கின்றார், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

பாகிஸ்தான் கடும் மௌனத்தில் கிடக்கின்றது. சீனாவிடம் சத்தமில்லை. ரஷ்யாவினை காணவில்லை. அமெரிக்கா காஷ்மீர் இந்தியாவின் பகுதி என சொல்லி விட்டது. இப்போது இந்தியா அடித்து கேட்கின்றது "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள மக்கள் இந்தியாவுடன் சேர விரும்புகின்றார்களா இல்லையா என வாக்கெடுப்பு நடத்த வேண்டும்"

அத்தோடு தலையில் கை வைத்த பாகிஸ்தான் அழுது விட்டது. காரணம் அப்படி ஒன்று நடக்காமலேயே அவர்கள் இந்தியாவோடு சேரத் துடிக்கின்றார்கள். வாக்கெடுப்பு நடந்தால் அவ்வளவு தான். இந்திய இடம் பார்த்து அடிக்க பாகிஸ்தான் வழி தெரியமால் வானம் பார்த்து விரக்தியாய் சிரிக்கின்றது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவோடு இணையும் நாள் தொலைவில் இல்லை. அந்த சாரதா பீடமும், நீல நதியும் மறுபடியும் இந்துக்கள் வசம் இனி வரும்.

இதிலே சுவாரஸ்யம் என்னவென்றால் முன்பு இந்திய காஷ்மீரில் வாக்கெடுப்பு என பாகிஸ்தான் உலகத்தை கூட்டி கொண்டு வரும். இந்தியா அழுது கொண்டிருக்கும்.

இப்போது தலைகீழாக இந்தியா உலக நாடுகளோடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாக்கெடுப்பு என கிளம்ப பாகிஸ்தான் ஒப்பாரி வைக்கின்றது.

ஏன் காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடகின்றது. ஏன் மோடி பிரசாரம் செய்தார். இதெல்லாம் எதற்காக உலகுக்கு காண்பிக்கப்படுகின்றது என்றால் அதற்கான பதில் ஜெய்சங்கரின் ஐநா முழக்கத்தில் இருக்கின்றது

மோடி அரசின் எல்லா நகர்வுமே ராஜதந்திரம் அதனை புரிந்து கொள்வது கடினம். ஆனால் நாட்டுக்கு எல்லாமே நன்மையாய் முடியும். காஷ்மீர் எனும் மகாசிக்கலும் அப்படித்தான் முடிகின்றது. அதுதான் மோடி அரசின் மாபெரும் சாதனை.

Tags

Next Story