இந்திய ஐ.டி.துறையில் அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா?

இந்திய ஐ.டி.துறையில் அதிக  சம்பளம் யாருக்கு தெரியுமா?

எச்சிஎல் நிறுவன தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் 

அதிக ஊதியம் பெறும் இந்திய ஐடி துறை சிஇஓ பட்டியலில் ஹெச்சிஎல் விஜயகுமார் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இந்திய ஐடி துறையில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரிகளின் (சிஇஓ) பட்டியலில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் முதலி டம் பிடித்துள்ளார்.

ஹெச்சிஎல் நிறுவனம் சமீபத்தில் அதன் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில், சிஇஓ விஜயகுமாருக்கு ஆண்டுக்கு ரூ.84.16 கோடி ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவரது ஊதியம் 190.75 சதவீதம் அதிகம் ஆகும்.

பங்கு, சலுகைகள்: அவரது அடிப்படை ஊதியம் ரூ.16.39 கோடி, போனஸ் ரூ.9.53 கோடி, ஊக்கத் தொகை ரூ.19.74 கோடி என்று கூறப்படுகிறது. நிபந்தனை அடிப்படையிலான பங்குகள், சலுகைகள் உள்ளிட்டவை சேர்த்து அவர் ஆண்டுக்கு ரூ.84.16 கோடி ஊதியம் பெறுகிறார்.

.அவரது ஊதியம் ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்களின் சராசரி ஊதியத்தைவிட 707.46 சதவீதம் அதிகம் ஆகும். விஜயகுமார் கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் மின் மற்றும் மின்னணு துறையில் பட்டம் பெற்றவர். ஹெச்சிஎல் நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக உள்ளார். 1994-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர். அந்நிறுவனத்தில் வெவ்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.

Next Story